fbpx

இராணிப்பேட்டை இளைஞர்களுக்கு ஓர் அரியவாய்ப்பு!… 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்!…அரசு துறையில் வேலை!

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பருவகால பட்டியல் எழுத்தர் -80, பருவகால காவலர்-80 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நெல் கொள்முதல் பணிக்காக இன சுழற்சி அடிப்படையில் இந்த வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பருவகால காவலர் பணிக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பருவகால பட்டியல் எழுத்தர் பணிக்கு ஆண், பெண் என இருபாலரும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருவகால பட்டியல் எழுத்தர் பணிக்கு இளங்க்லை அறிவியல், வேளாண்மை மற்றும் பொறியியல் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பருவகால காவலர் பணிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க 37 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது குறித்து அறிவிப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளவும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களுடன் அலுவலகத்திற்கு அஞ்சல் அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை அலுவலகத்தில் நேரில் சென்று பெற்றுகொள்ளலாம்.இதற்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: முதுநிலை மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், நான்காவது ‘ஏ’பிளாக், இராணிப்பேட்டை . விண்ணப்பிக்க கடைசி நாள்- 03.05.2023 ஆகும்.

Kokila

Next Post

அடடே இந்த ஐடியா நல்லாயிருக்கே!... தூக்கி எறியப்படும் பொருட்களை மீண்டும் உபயோகிக்க சில டிப்ஸ்!

Sun Apr 30 , 2023
வீட்டில் நாம் தூக்கி எறியப்படும் பொருட்களை வைத்து எப்படி உபயோகமுள்ள பொருளாக மாற்றலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம் பெண்களை ,தங்களது சமையலறையில அல்லாது வீட்டு பயன்பாட்டு பொருளிலோ ஏதாவது மீதம் இருந்தால், ஏதாவது ஒரு முறையில் அதை பயன்படுத்தலாம் என்று தான் யோசிப்பார்கள். ஆனால், சில சமயங்களில் நாம் நமக்கு தெரியாமலே வீணடிக்கப்படுவதுண்டு. அந்த வகையில் தற்போது இந்த பதிவில் அப்படி எதையெல்லாம் வீணடித்தோம் என்றும்,இனிமேல் அதை […]

You May Like