fbpx

தேர்வு கிடையாது.. மத்திய அரசு நிறுவனத்தில் வேலை.. ரூ.84,000 வரை சம்பளம்..!! மிஸ் பண்ணிடாதீங்க..

மத்திய அரசின் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் நிறுவனத்தின் (BHEL) பெங்களூர் பிரிவில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியிடங்கள்:

திட்ட இன்ஜினியர் (Project Engineer) – 17

திட்ட மேற்பார்வையாளர் (Project Supervisor) – 16

வயது வரம்பு: பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் நிறுவனத்தில் உள்ள இப்பணியிடங்களுக்கு 01.03.2025 தேதியின்படி, அதிகபடியாக 32 வயது வரை இருக்கலாம். இதில் ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளுக்கு, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள் வரையும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரையும் வயது வரம்பில் தளர்வு உள்ளது.

கல்வித்தகுதி: திட்ட இன்ஜினியர் மற்றும் திட்ட மேற்பார்வையாளர் ஆகிய பதவிக்கு எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ரூமெண்டேசன் ஆகிய பிரிவுகளில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலு, 1 ஆண்டுகள் அனுபவம் தேவை.

சம்பள விவரம்:

* திட்ட இன்ஜினியர் பதவிக்கு முதல் ஆண்டு ரூ.84,000 ஆகவும், இரண்டாம் ஆண்டு ரூ.88,000 ஆகவும் வழங்கப்படும்.

  • * திட்ட மேற்பார்வையாளர் பதவிக்கு முதல் ஆண்டு ரூ.45,000 ஆகவும், இரண்டு ஆண்டு ரூ.48,000 ஆகவும் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் இருந்து கவ்லித்தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படுபவர்கள் 2 ஆண்டுகளுக்கு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இப்பணியிடங்களுக்கு https://edn.bhel.com/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. மேலும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

AGM (HR), Bharat Heavy Electricals Limited, Electronics Division, P. B. No. 2606, Mysore
Road, Bengaluru-560026

Read more: அதிர்ச்சி.. 9 வது மாடியில் இருந்து குதித்து தனியார் பள்ளி ஆசிரியை தற்கொலை..! என்ன காரணம்..?

English Summary

A recruitment notification has been issued by the central government’s Bharat Heavy Electrical Company.

Next Post

மகளிர் உரிமைத்தொகை..!! இன்னும் 3 மாதங்களுக்குள் உங்களுக்கும் ரூ.1,000 வரப்போகுது..!! அமைச்சர் தங்கம் தென்னரசு சூப்பர் அறிவிப்பு..!!

Mon Mar 31 , 2025
Finance Minister Thangam Thennarasu has announced that women who have not received the women's allowance will be paid the women's rights allowance within 3 months.

You May Like