fbpx

வீட்டிற்கு தெரியாமல் கோவா சென்ற காதல் ஜோடி..!! கடல் அலையில் சிக்கி பலியான சோகம்..!! நடந்தது என்ன..?

காதலர் தினத்தை கொண்டாடுவதற்காக கோவா சென்ற காதலர்கள் கடலில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுக்க காதலர் தினம் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பலரும் தங்கள் காதலன்/காதலிக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக பரிசுகள் உள்ளிட்ட பல சர்ப்ரைஸ்களை கொடுத்தனர். கோயில்கள், கடற்கரை, தியேட்டர்கள், மால்கள் என எங்கு பார்த்தாலும் காதலர்களின் கூட்டம் தான் காண முடிந்தது. இப்படி மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த காதலர் தின கொண்டாட்டத்தில் சோகமான சம்பவம் ஒன்று கோவாவில் நிகழ்ந்துள்ளது. வெளியூர்களில் பணிபுரியும் காதலர்கள், காதலர் தினத்தை கொண்டாடுவதற்காக பல்வேறு இடங்களுக்கு செல்வது போல, உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த காதல் ஜோடி ஒன்று கோவாவிற்கு சென்றுள்ளனர்.

விபு சர்மா என்ற அந்த இளைஞர் டெல்லியில் உள்ள ஒரு நிறுவனத்திலும், சுப்ரியா என்ற பெண் பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்திலும் பணிபுரிந்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், காதலர் தினத்தை கொண்டாட இருவரும் வீட்டிற்கு தெரியாமல் கோவா சென்றுள்ளனர். அங்கு பல்வேறு இடங்களுக்கும் சென்று சுற்றிப்பார்த்த அவர்கள் நேற்று காதலர் தினம் என்பதால் 13ஆம் தேதி நள்ளிரவு முதல் கோவாவின் பலோலம் கடற்கரையில் சுற்றியுள்ளனர். அங்கு கடலில் இறங்கி விளையாடியதாகவும் கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக இருவரும் அலையில் சிக்கி கடலில் மூழ்கினர்.

பின்னர், மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள், கடலில் மூழ்கிய இருவரையும் மயங்கிய நிலையில், மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், சுப்ரியாவும் விபுவும் உறவினர்கள் என்று தெரியவந்தது. அவர்கள் இருவரும் குடும்பத்தினருக்குத் தெரியாமல் கோவா வந்ததும் விசாரணையில் வெளிவந்தது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

”கல்யாணமாகி 3 நாள் தான் ஆச்சு”.!! விருந்துக்கு சென்ற தம்பதி பரிதாப பலி..!! சோகத்தில் குடும்பத்தினர்..!!

Wed Feb 15 , 2023
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் இச்சாபுரம் பகுதியைச் சேர்ந்த வேணு என்பவருக்கும் (26), ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிரவல்லிகா (23) என்ற பெண்ணுக்கும் கடந்த 10ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, மணமகன் வீட்டில் இளம்தம்பதி ஒன்றாக இருந்தனர். பின்னர் கடந்த 13ஆம் தேதி, இருசக்கர வாகனத்தில் புதுமண தம்பதியினர் இருவரும் மணமகளின் வீட்டிற்கு விருந்துக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, ஆந்திரா-ஒடிசா மாநில எல்லையில், கொல்லாந்திரா எனும் இடத்தில் […]
”கல்யாணமாகி 3 நாள் தான் ஆச்சு”.!! விருந்துக்கு சென்ற தம்பதி பரிதாப பலி..!! சோகத்தில் குடும்பத்தினர்..!!

You May Like