பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் என்ற இடத்தில் நடைபெற்ற பாரத் பந்த் போராட்டத்தின் போது குழந்தைகளுடன் சென்ற பள்ளி பேருந்து மீது போராட்டக் கும்பல் தாக்கி தீ வைக்க முயன்றது. காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் உரிய நேரத்தில் தலையிட்டு பெரும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைத் தடுத்ததால் பள்ளிக் குழந்தைகள் உயிரிழப்பு சம்பவத்தில் இருந்து தப்பினர்.
தாழ்த்தப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தலித் மற்றும் ஆதிவாசி குழுக்களால் அழைப்பு விடுக்கப்பட்ட பாரத் பந்த் போராட்டத்தின் ஒரு பகுதியாக, தடிகளுடன் ஆயுதம் ஏந்திய கும்பல், அப்பகுதியில் திரண்டது. வெளியான காட்சிகளின் படி, மஞ்சள் நிற பள்ளி பேருந்த போராட்ட கும்பல் சுற்றி வளைத்தது. எரியும் டயரை பள்ளி பேருந்தை சுற்றி போட்டனர். டயர்கள் சாலையில் சிதறிக் கிடப்பதால், பஸ் கடந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டது. கும்பல் வன்முறையால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் வாகனமும் சிக்கி கொண்டது.
பாரத் பந்த் காரணமாக அப்பகுதியில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கோபால்கஞ்ச் காவல் கண்காணிப்பாளர் ஸ்வர்ன் பிரபாத் ஆங்கில தொலக்காட்சிக்கு தெரிவித்தார். மேலும், ட்ரோன் கேமராக்கள் மூலம் பிரச்னையை உருவாக்கும் சில நபர்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், நகரின் பல்வேறு இடங்களில் ஏராளமான போலீசார் மற்றும் மாஜிஸ்திரேட்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அடையாளம் காணப்பட்ட பிரச்சனையாளர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவும், பேருந்திற்கு தீ வைக்க முயன்றவர்களை சிறைக்கு அனுப்பவும் காவல்நிலையத்திற்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஆர்ப்பாட்டக்காரர்களின் கணிசமான கூட்டத்தை கலைக்கும் முயற்சியில், போலீசார் லத்தி சார்ஜ் மற்றும் தண்ணீர் பீரங்கிகளை பயன்படுத்தி போரட்ட காரர்களை விரட்டினர்.
Read more ; 2023ல் 65 லட்சம் மாணவர்கள் 10, 12ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெறவில்லை..!! – ஷாக் ரிப்போர்ட்