fbpx

ரஜினி மகள் ஐஸ்வர்யாவுக்கு தனி கொடி..!! அலப்பறை செய்த திருச்சி ரசிகர்கள்..!!

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிக்காகத் தனிக் கொடியை திருச்சியில் ரஜினி ரசிகர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய ‘லால் சலாம்’ திரைப்படம் இன்று வெளியானதை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் ரசிகர்கள் திருவிழா போலக் கொண்டாடி வருகின்றனர். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கட் அவுட், மேளதாளத்துடன் பட்டாசு வெடித்து திரையரங்குகளில் ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர். இதேபோன்ற கொண்டாட்டத்தையும் திருச்சியிலும் ரஜினி ரசிகர்கள் செய்திருக்கின்றனர். இதோடு இவர்கள் செய்திருக்கும் மற்றொரு செயலும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புகைப்படத்துடன் கூடிய கொடி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளனர். ’லால் சலாம்’ என்ற படத்தின் தலைப்பிற்கு ஏற்ப சிவப்பு நிறக் கொடியில் மஞ்சள் நிற வட்டத்திற்குள் ஐஸ்வர்யாவின் புகைப்படத்தை அச்சிட்டு அதைச் சுற்றி ‘சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்’ எனும் வாக்கியத்தை அச்சிட்டுள்ளனர்.

Chella

Next Post

கண்ணுக்குத் தெரியாத காற்றில் ஊழல் செய்தவர் ஆ.ராசா..!! மக்களால் அடக்கப்படுவார்..!! எடப்பாடி பழனிசாமி தாக்கு..!!

Fri Feb 9 , 2024
எம்ஜிஆர் குறித்து அவதூறாக பேசிய திமுக எம்பி ஆ.ராசா மக்களால் அடக்கப்படுவார் என எடப்பாடி பழனிசாமி காட்டமாக பேசியுள்ளார். எம்ஜிஆர் குறித்து அவதூறாக பேசிய ஆ.ராசாவை கண்டித்து திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் மேற்கு ரத வீதியில் அக்கட்சி சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “பொறாமையில், எம்ஜிஆர். குறித்து அவதூறாக ஆ.ராசா பேசுகிறார். இவர்கள் நாட்டிலிருந்து அகற்றப்பட வேண்டும். வீட்டுக்கு அடங்காத பிள்ளை […]

You May Like