fbpx

அனைத்து மருத்துவர்களுக்கும் தனி அடையாள அட்டை!… தேசிய மருத்துவ ஆணையத்தில் பதிவு செய்வது கட்டாயம்!

நாட்டில் உள்ள அனைத்து மருத்துவர்களும் தனி அடையாள அட்டை மற்றும் மாநில மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்வது மட்டுமின்றி தேசிய மருத்துவ ஆணையத்திலும் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.

தேசிய மருத்துவ ஆணையத்தின் (NMC) அறிவிப்பின்படி, தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் 2019ன் கீழ் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ தகுதியை பெற்று சட்டப்பிரிவு 15ன் கீழ் மருத்துவர்களுக்கான தகுதி தேர்விலும், (என் இ டி – எக்ஸிட் தேர்வு) தகுதி பெற்றவர்கள், தேசிய மருத்துவ பதிவேட்டில் (என் எம் ஆர்) தங்களுடைய விவரங்களை பதிவு செய்துகொள்ளவேண்டும். வெளிநாட்டில் மருத்துவ படிப்பை முடித்து என் இ டி தேர்வில் தகுதி பெற்றவர்களும் இந்த பதிவேட்டில் பதிவு செய்துகொள்ளலாம். ஆனால் அவர்கள் வெளிநாட்டு மருத்துவ பட்ட வழிகாட்டுதல் 2021ல் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்திருக்கவேண்டும். அவ்வாறு பதிவு செய்யாத மருத்துவர்களுக்கு மருத்துவ பதிவு வாரியம் மற்றும் தேசிய மருத்துவ ஆணையத்தின் சார்பில் தனி அடையாள எண் (யுஐடி) வழங்கப்படும். அதன் மூலம் அவர்கள் இந்தியாவில் மருத்துவராக பணியாற்றும் தகுதியை பெறுவர்.

இதன்படி, பதிவு செய்த மருத்துவர்களின் விவரங்கள் தேசிய மருத்துவ ஆணையத்தின் வலைதளத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வெளியிடப்படும். மருத்துவரின் பதிவு எண், பெயர், பதிவு செய்த தேதி, பணி புரியும் இடம், மருத்துவ கல்வி தகுதி, சிறப்பு மருத்துவ தகுதி அவர் படித்த கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் அதில் இடம்பெற்றிருக்கும். இந்த புதிய வழிகாட்டுதல்கள் மருத்துவ பதிவு வாரிய வலைதள பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட 3 மாதங்களுக்குள் அனைத்து மருத்துவர்களும் விவரங்களை பதிவு செய்து பதிவு எண்ணை பெற்றுக்கொள்ளவேண்டும். அப்போதுதான் அவர்கள் மருத்துவர்களாக பணிபுரிவதற்கான உரிமத்தை பெற முடியும். இந்த உரிமம் 5 ஆண்டு காலம் வரை செல்லும். மேலும் இதற்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது.

இதுமட்டுமல்லாமல், மருத்துவர்கள் விரும்பும் மாநிலத்தில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பத்தை உரிய கட்டணம் செலுத்தப்பட்ட 30 நாட்களுக்குள் சம்பந்தபட்ட மாநில மருத்துவ கவுன்சிலில் பரிசீலித்து மருத்துவராக பணியாற்றுவதற்கான உரிமத்தை வழங்கவேண்டும். இவ்வாழ்று மாநில மருத்துவ கவுன்சில் சார்பில் வழங்கப்படும் மருத்துவர்களுக்கான பணி உரிம விவரங்களும் தேசிய மருத்துவ பதிவேடு மற்றும் மாநில மருத்துவப் பதிவேட்டிலும் பதிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kokila

Next Post

ஹேக்கர்களிடமிருந்து ஆன்லைன் அக்கவுண்ட்ஸ்களை பாதுகாக்க!... பாஸ்வேர்ட்-க்கு பதில் பாஸ்கீஸ்!... கூகுளின் புதிய முயற்சி!

Wed May 17 , 2023
ஹேக்கர்களிடமிருந்து ஆன்லைன் அக்கவுண்ட்ஸ்களை பாதுகாக்கும் வகையிலும், பாஸ்வேர்ட் இல்லாத இணைய உலகை பயனர்கள் கட்டமைக்கவும் ஓர் புதிய முயற்சியாக பாஸ்கீஸ் என்பதை கொண்டுவரவுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. இன்றைய டிஜிட்டல் உலகில் ஜிமெயில் துவங்கி பெரும்பாலான தளங்களின் சேவையை பெற பயனர்கள் தங்களது கணக்கின் பாஸ்வேர்டை உள்ளிட வேண்டி உள்ளது. அதில் சில பயனர்கள் என்ன பாஸ்வேர்ட் கொடுத்தோம் என்பதையே மறந்து போய் இருப்பார்கள். சிலர் எளிதாக நினைவில் வைத்துக் கொள்ளும் […]

You May Like