உக்ரைனில் மீண்டும் போர் தொடங்கியுள்ள நிலையில் அடுத்தடுத்து நடந்த பயங்கரமான குண்டுவெடிப்புகளில் பலர் உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகின்றது.
உக்ரைன் தலைநகர் கீவ் உள்பட பல நகரங்களில் குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன. அடுத்தடுத்தடுத்து முக்கிய பகுதிகளில் குண்டுகள் வெடித்ததால் கார்கள் தீப்பிடித்து கொளுந்துவிட்டெரிந்தது. இது குறித்து கீவ் நகரத்தின் மேயர் விட்டாலி க்லிட்ச்கோ குண்டு வெடிப்பு பற்றி தெரிவித்துள்ளார். ’மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பழமைவாய்ந்த நகரத்தில் நடந்த குண்டுவெடிப்பில் பல்வேறு அரசு அலுவலகங்கள் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக கூறினார்.
உக்ரைன் அதிபர் விலாடிமிர்ஜெலென்ஸ்கி கூறுகையில் பலர் உயிரிழந்திருக்ககூடும் எனவும் பலர் படுகாயம் அடைந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் முக்கியமான நீண்ட பாலம் ஒன்று குண்டுவெடிப்பில் படு சேதம் அடைந்தது. இதற்கு உக்ரைன்தான் காரணம் என ரஷ்ய அதிபர் விலாடிமிர்புதின் குற்றச்சாட்டு வைத்துள்ளார். ரஷ்யாவையும் கிரிமியாவையும் இணைக்கும் முக்கிய பாலம் தரைமட்டமானது குறித்து அதிபர் புதின் ர் அறிக்கை அனுப்பிய சில மணி நேரங்களில் உக்ரைனின் பல நகரங்கள் கொளுந்துவிட்டெறிகின்றன.
ரஷ்யாவில் நடந்த தாக்குதல் குறித்து விசாரணைக்குழு தலைவரான அலெக்சாண்டர் பாஸ்ட்ரிகினுடன் கலந்துரையாடிய புதின் அடுத்த நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றார்.
இந்நிலையில் உக்ரைனுடன் ரஷ்யா இணைக்கும் விவகாரத்தை ஐ.நா. கையிலெடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது ஐ.நா. பொதுக் கூட்டத்தில் உக்ரைனின் 4 மாகாணங்களை ரஷ்யாவுடன் இணைக்கும் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே செப்டம்30ம் தேதி நடந்த ஐ.நா. கூட்டத்தில் ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்யாவின் முக்கிய உள்கட்டமைப்பை அழிக்கும் நோக்கத்தில் உக்ரைன் செயல்பட்டதாக அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.