fbpx

தமிழகத்தில் தொடர் விடுமுறை..! நாளை முதல் 1,100 சிறப்பு பேருந்துகள் இயங்கும்..! போக்குவரத்துக் கழகம்…

தமிழகத்தில் (செப்டம்பர் 28 ஆம் தேதி) வியாழக்கிழமை மீலாது நபி சனி மற்றும் ஞாயிறு அதனைத்தொடர்ந்து திங்கள்கிழமை காந்தி ஜெயந்தி என வெள்ளிக்கிழமையை தவிர தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் வெள்ளிக்கிழமையும் நிறைய பேர் விடுப்பு எடுத்துள்ளனர். இதனால் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை தொடர் 5 நாட்கள் விடுமுறை என்பதால் சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் திட்டமிட்டுள்ளனர். இவர்கள் பயன்பெறும் வகையில், நாளை முதல் 1,100 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகம் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அரசு விரைவுப்‌ போக்குவரத்துக்‌ கழகம்‌ மேலாண்‌ இயக்குநர்‌ வெளியிட்டுள்ள அறிக்கையில், “வியாழக்கிழமை (செப்டம்பர் 28) மிலாடி நபி, சனிக்கிழமை (செப்டம்பர் 30) ஞாயிற்றுக்‌ கிழமை (அக்டோபர் 1) மற்றும்‌ திங்கட்கிழமை (அக்டோபர் 2) காந்தி ஜெயந்தி ஆகியவை விடுமுறை நாட்கள் என்பதால்‌ பயணிகள்‌ சொந்த ஊர்களுக்கு சென்று வருவார்கள்‌ என எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளி, சனி, ஞாயிறு. மற்றும்‌ திங்கள்‌ கிழமை வரை பயணிகள்‌ அதிகளவில்‌ முண்பதிவு செய்துள்ளனர்‌. இதனை கருத்தில்‌ கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்‌ கழகங்கள்‌ தினசரி இயக்கப்படும்‌ பேருந்துகளுடன்‌ கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும்‌, இந்நாள் வரை சென்னை மற்றும்‌ பல்வேறு இடங்களிலிருந்து பயணம்‌ மேற்கொள்ள செப்டம்பர் 27ஆம் தேதியன்று 16,960 பயணிகளும்‌ செப்டம்பர் 29ஆம் தேதியன்று 44,475 பயணிகளும்‌ மற்றும்‌ அக்டோபர் 3ஆம் தேதியன்று 7,919 பயணிகளும்‌ முன்பதிவு செய்துள்ளனர்‌.

பயணிகள்‌ எந்தவித சிரமமின்றி பயணம்‌ மேற்கொள்ள ஏதுவாக சென்னையிலிருந்து தமிழகத்தின்‌ முக்கிய இடங்களுக்கு செப்டம்பர் 27ஆம் தேதியன்று தினசரி பேருந்துகளுடன்‌ கூடுதலாக 250 பேருந்துகளும்‌, செப்டம்பர் 29ஆம் தேதியன்று 48௦ பேருந்துகளும்‌ பல்வேறு இடங்களிலிருந்து அதாவது கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம்‌ போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும்‌ மற்றும்‌ பெங்களூரிலிருந்து பிற இடங்களுக்கும்‌ 409 சிறப்பு பேருந்துகளும்‌ ஆக மொத்தம்‌ 1700 பேருந்துகள்‌ இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி அக்டோபர் 2ஆம் தேதியன்று திங்கட்கிழமை அன்று சொந்த ஊர்களில்‌ இருந்து சென்னை மற்றும்‌ பெங்களூர்‌ திரும்ப வசதியாக பயணிகளின்‌ தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும்‌ சிறப்பு பேருந்துகள்‌ இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. திங்கட்‌கிழமை பயணம்‌ மேற்கொள்வதற்கு இதுவரை 17,242 பயணிகள்‌ முண்பதிவு செய்துள்ளனர்‌. இந்த எண்ணிக்கை மேலும்‌ அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால்‌ தொலைதூர பயணம்‌ மேற்கொள்ள இருக்கும்‌ பயணிகள்‌ தங்களது பயணத்திற்கு முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌. இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும்‌ போதிய அலுவலர்கள்‌ நியயிக்கப்பட்டுள்ளனர்‌. எனவே, பொதுமக்கள்‌ இவ்வசதியினை பயன்படுத்திக்‌ கொள்ளுமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌” என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Kathir

Next Post

"என் நெஞ்சில் குடியிருக்கும்" இந்த முறை கிடையாது..! தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

Tue Sep 26 , 2023
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள இரண்டாவது படம் லியோ. இந்த படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். சமீபத்தில், நடிகர்கள் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் ஆகியோரின் பிறந்தநாள்களை முன்னிட்டு சிறப்பு கிளிம்ப்ஸ் விடியோக்களை படக்குழு வெளியிட்டிருந்தது. மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக உருவாகியுள்ள இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. […]

You May Like