fbpx

அடுக்கடுக்கான கேள்விகள்..!! அஃப்செட் ஆன மாணவி..!! பதறிய பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!!

செல்போனில் அம்மா கடுமையாக பேசியதால், மனமுடைந்த கல்லூரி மாணவி, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீமதி. இவர் சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். இவர் தனது கல்லூரியின் விடுதியில் தங்கி உள்ளார். ஆனால், அவருக்கு அங்கு ஹாஸ்டல் சாப்பாடு பிடிக்கவில்லை என்பதால், ஸ்ரீமதியின் பெற்றோர் குரோம்பேட்டையில் வீடு வாடகைக்கு எடுத்து ஸ்ரீமதியுடன் தங்கி உள்ளனர். கடந்த டிசம்பர் 18ஆம் தேதியன்று, ஸ்ரீமதியின் பெற்றோர் மயிலாடுதுறையில் உள்ள தங்களது சொந்த வீட்டை காலி செய்வதற்காக அங்கு சென்றுள்ளனர். அப்போது, ஸ்ரீமதியின் அம்மா ஸ்ரீமதியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், அவர் போனை எடுக்கவில்லை.

அடுக்கடுக்கான கேள்விகள்..!! அஃப்செட் ஆன மாணவி..!! பதறிய பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!!

பின்னர் வெகு நேரம் கழித்து ஸ்ரீமதி அம்மாவுக்கு போன் செய்து பேசியுள்ளார். அப்போது ஸ்ரீமதியின் அம்மா ”எப்பொழுதும் போன் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறாய்.. நாங்கள் எத்தனை தடவை உனக்கு போன் செய்வது?. ஏன் போனை எடுக்கவில்லை. பரீட்சை நேரத்தில் படிக்காமல் எப்பொழுதும் ஃபோனையே பார்த்துக் கொண்டிருக்கிறாய், காலேஜுக்கு எதற்கு போன் எடுத்து சென்றாய்?” என்றும் அடுக்கடுக்காக கேள்விகளை கேட்டுள்ளார். சிறிது நாட்களுக்கு முன்பு ஸ்ரீமதியின் காலேஜிலிருந்து ஸ்ரீமதியின் பெற்றோருக்கு போன் செய்து தேர்வு சமயங்களில் உங்கள் பெண் ஃபோன் எடுத்து வந்து காலேஜில் உபயோகப்படுத்துகிறார் என்று கூறியுள்ளனர்.

அடுக்கடுக்கான கேள்விகள்..!! அஃப்செட் ஆன மாணவி..!! பதறிய பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!!

இதனால், ஏற்பட்ட ஆத்திரம் மற்றும் சம்பவத்தன்று போனை எடுக்காதது என ஸ்ரீமதி அம்மா கடுமையாக திட்டித் தீர்த்துள்ளார். இதனால் ஒருகட்டத்தில் ஸ்ரீமதி பேசிக்கொண்டு இருக்கும்போதே போனை துண்டித்துள்ளார். மீண்டும் அவர்கள் ஸ்ரீமதிக்கு போன் செய்துள்ளனர். ஆனால் ஸ்ரீமதி போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஸ்ரீமதியின் பெற்றோர், பக்கத்து வீட்டிற்கு போன் செய்து ஸ்ரீமதியை சென்று பார்க்கும் படி கூறியுள்ளனர். அப்போது, ஸ்ரீமதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பின்னர் அவர்கள் ஸ்ரீமதியின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பின் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ஸ்ரீமதியின் உடலை மீட்டு பெற்றோரிடம் விசாரித்து வருகின்றனர்.

Chella

Next Post

#JOB : டிசம்பர் 31 கடைசி தேதி... 44,000-88,000 வரை சம்பளம், உச்சநீதிமன்றத்தில் வேலை...!

Wed Dec 21 , 2022
உச்சநீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது, அதனை படி உச்சநீதிமன்றத்தின் கோர்ட் அசிஸ்டன்ட் பணிக்கான 11 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது, இதற்கு விண்ணபிக்க கல்வித்தகுதி (B.E, B.Tech, BCA, BSC/MSC(computer science)) குறிப்பிட்டுள்ளதில் ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பித்தவர்களுக்கு எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு எனும் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள், இதற்கான சம்பளம் ரூ.44,900 – ரூ.80,803 என்று கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் […]

You May Like