fbpx

இன்று சிக்கன் வாங்குபவர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி..!

சைவ உணவை விட அசைவ உணவை விரும்புபவர்களே அதிகம். அதிலும் ஞாயிற்றுக்கிழமை வந்தாலே காலையில் முதல் வேலையாக கடைக்கு சென்று கறி எடுத்து வந்து சமைத்து சாப்பிடுவது பலரின் வழக்கம். அப்படி பலர் விரும்பும் உணவாக இருப்பது கோழிக்கறி தான். புரட்டாசி மாதத்தில் அசைவ உணவு சாப்பிடாமல் ஏங்கி கிடந்த பலர், புரட்டாசி முடிந்ததும் அசைவ உணவு சாப்பிடுவது அதிகமாகியுள்ளதால் தற்போது கோழிக்கறியின் விலை உயர்ந்துள்ளது.

கடந்த 4 நாட்களில் மூன்றாவது முறையாக கறிக்கோழியின் விலை உயர்ந்துள்ளது. நாமக்கல்லில் கடந்த வாரம் கறிக்கோழி 1 கிலோ (உயிருடன்) ரூ.97ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.104 ஆக உயர்ந்துள்ளது. கடந்த நாட்களில் விலை உயர்ந் நிலையில் நேற்றைய தினம் விலை உயராமல் இருந்தது. ஆனால் ஞாயிற்றுக்கிழமையான இன்று கிலோவுக்கு ரூ.2 அதிகரித்து விற்க்கப்படுகிறது. இதன் காரணமாக சென்னை போன்ற நகரங்களில் கோழிக்கறியின் விலை இன்று அதிகரித்துள்ளது.

Kathir

Next Post

இந்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு…! பட்ட படிப்பு முடித்த நபர்கள் விண்ணப்பிக்கவும்…

Sun Oct 29 , 2023
இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் மத்திய ரயில்வேயில் Railway Officers (Pay Matrix Level – 1 / 2) பணிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 12 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்த பணியில் சேருவதற்கு ஏதாவது ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 7th CPC Pay Level 2 முதல் […]

You May Like