fbpx

மத்திய பிரதேசத்தில் ஒரே ஊசியை வைத்து 30 மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்திய அதிர்ச்சி சம்பவம்…

மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஒரே ஊசியை பயன்படுத்தி 39 மாணவர்களுக்குத் தடுப்பூசி போட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. மத்தியப் பிரதேச மாநிலத்தின் சாகர் என்ற பகுதியில் உள்ள ஜெயின் பப்ளிக் பள்ளியில், மாணவர்களுக்கு கோவிட் தடுப்பூசி முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஜிதேந்திரா என்ற சுகாதார பணியாளர் தடுப்பூசி போடும் பணியை செய்து கொண்டிருந்தார்.

அப்பொழுது, அவர் ஒரே ஊசியை வைத்து சுமார் 30 மாணவர்களுக்குத் தடுப்பூசி போட்டுள்ளார். இதைக் கண்ட மாணவர்களின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அந்த பணியாளரிடம் தங்களின் சந்தேகத்தை கேட்டனர். அதற்கு அந்த பணியாளர், இதில் என் தவறு எதுவும் இல்லை நிர்வாகம் எனக்கு ஒரு சிரஞ்ச் மட்டும் தான் தந்துள்ளது. இதற்கு நான் என்ன செய்யமுடியும் என்று அலட்சியமாக கேட்டுள்ளார். இதில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் ஒன்பதாம் வகுப்பில் இருந்து பன்னிரண்டாம் வகுப்பை சேர்ந்தவர்கள்.

இதைதொடர்ந்து, மாணவர்களின் பெற்றோர் எழுப்பிய புகாரின் பேரில் அந்த பணியாளர் கைது செய்யப்பட்டு இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். மேலும், அந்த மாவட்ட தடுப்பூசி திட்ட பிரிவு தலைமை அலுவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அம்மாவட்ட தலைமை மருத்துவ அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர், ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். எச்ஐவி பாதிப்பு பரவலுக்குப் பிறகு நாட்டில் 1990களில் இருந்து ஒரு முறை பயன்படுத்தும் டிஸ்போசபல் ஊசிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Baskar

Next Post

செஸ் ஒலிம்பியாட்டை தொடர்ந்து ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டி..! பிரதமருக்கு முதல்வர் கடிதம்..!

Fri Jul 29 , 2022
சென்னையில் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது தொடர்பாக ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலுக்கு உரிய உத்தரவாதங்களை மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் விரைவில் வழங்கிட உரிய நடவடிக்கைகளை எடுக்கக் கோரி, பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், சென்னையில் நடைபெற்ற 44-வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்து கொண்டமைக்கும், இவ்விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்துவதற்குத் தேவையான அனைத்து உதவிகளை […]
டெல்லி விரைகிறார் முதலமைச்சர் முக.ஸ்டாலின்..! பிரதமருடன் முக்கிய ஆலோசனை..?

You May Like