fbpx

கேரளா பாணியில் கடலூரில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!! திருமணமான ஒரே மாதத்தில் கணவருக்கு விஷம் கலந்த குளிர்பானம்..!!

திருமணமான ஒரே மாதத்தில் கணவருக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் தனது காதலுக்கு குளிர்பானத்தில் விஷம் கொடுத்து கொலை செய்த வழக்கில் காதலி கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது கடலூர் மாவட்டத்திலும் இதுபோன்ற சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இதுகுறித்த செய்தித் தொகுப்பை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

கடலூர் மாவட்டம் அயன்கருவேப்பம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவர், கடலூர் மாவட்ட எஸ்பியிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், தனது மகன் கலையரசனுக்கு கடந்த ஜனவரி 26ஆம் தேதி ஷாலினி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் பெரியோர்களின் சம்மதத்துடன் நடந்தது. ஆனால், ஷாலினிக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை.

மேலும், அவர் வேறொருவரை விரும்புவதாக முதலிரவின்போது தனது மகன் கலையரசனிடம் கூறியுள்ளார். இதனால், ஷாலினியை அவரது வீட்டிற்கே அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், ஷாலினியை சமாதானப்படுத்தி மீண்டும் கலையரசனின் வீட்டில் விட்டுச் சென்றுள்ளனர். இந்நிலையில் தான், கடந்த பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி, குளிர்பானத்தில் விஷம் கலந்து கலையரசனிடம் கொடுத்துள்ளார்.

அதை குடித்த கலையரசன் தற்போது, புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்” என்று அவரது தந்தை சுந்தரமூர்த்தி புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக புதுச்சத்திரம் காவல்நிலைய போலீசார், வழக்குப்பதிவு செய்து ஷாலினியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான ஒரே மாதத்தில் கணவருக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : ’பாசிசம்.. பாயாசமா’..? ’அப்படினா நீங்க என்ன பாதரசமா’..? விஜய்யை வெச்சி செய்த நடிகர் கருணாஸ்..!!

English Summary

The incident of poisoning her husband’s soft drink within a month of their marriage has caused a stir.

Chella

Next Post

5 இளைஞர்களில் ஒருவர் இந்த ஆபத்தான நோய் இருப்பது தெரியாமலே வாழ்கின்றனர்.. அதன் அறிகுறிகள் என்ன?

Sat Mar 1 , 2025
Experts report that 1 in 5 young people worldwide have fatty liver disease

You May Like