fbpx

Rain: வாட்டும் வெயிலுக்கு சின்ன பிரேக்!… இம்மாதம் முழுவதும் குடையை மறந்துடாதீங்க!… வானிலை மையம் சொன்ன குட்நியூஸ்!

Rain: மார்ச் மாதத்தில் இயல்பை விட அதிக மழைப்பொழிவு பதிவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குனர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா தெரிவித்துள்ளார்.

கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே, நாட்டில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால், மக்களுக்கு பல்வேறு அசவுகரியங்கள் ஏற்படுகிறது. இதனால், வெயிலின் தாக்கத்தை தணிக்க மக்கள் மழையை எதிர்பார்த்து இருக்கின்றனர். இந்தநிலையில் செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி வானிலை ஆய்வு மைய இயக்குனர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா, நம் நாட்டில், ‘எல் நினோ’வின் தாக்கத்தால் கோடை காலத்தில் இயல்பை விட கூடுதல் வெப்பம் அலை வீசும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதாவது, எல் நினோ தாக்கம் நீடிப்பதால் கோடை காலத்தின் போது வடகிழக்கு தீபகற்ப பகுதியில் அமைந்துள்ள தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்டிரா மற்றும் ஒடிசாவின் பல பகுதிகளில் இயல்பை விட, அதிக வெப்ப அலை வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், வட மற்றும் மத்திய பகுதிகளில், இந்த மாதத்தில் வெப்ப அலையை எதிர்பார்க்க முடியாது என்று கூறியுள்ளார்.

மார்ச் மாதத்தில் இயல்பை விட அதிக மழைப்பொழிவு பதிவாகவும் வாய்ப்பு உள்ளது. இக்காலக்கட்டத்தில், சராசரியாக 3 செ.மீ., மழை பதிவாகும் நிலையில், 117 சதவீதம் கூடுதல் மழைப்பொழிவு இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. மத்திய பசிபிக் பெருங்கடலில் நிலவும் சீதோஷ்ண நிலை காரணமாக, நம் நாட்டில் கோடை காலம் முழுதும் எல் நினோவின் தாக்கம் இருக்கும் எனவும் அவர் கூறினார்.

Readmore: அதிகரிக்கும் இளம்வயது உடல் பருமன்!… ஆண்களைவிட பெண்களின் விகிதமே அதிகம்!… ஷாக் ரிப்போர்ட்!

Kokila

Next Post

இன்னும் 3 நாட்களில் UPSC தேர்வு!... எப்படி, எங்கு விண்ணப்பிப்பது? முழு விவரம்!

Sat Mar 2 , 2024
UPSC: யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வு (CSE) 2024 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், தங்கள் ஆன்லைன் விண்ணப்பங்களை மார்ச் 5, 2024 க்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, தேர்வின் மூலம் நிரப்பப்பட வேண்டிய காலியிடங்களின் எண்ணிக்கை தோராயமாக 1056 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதில் 40 இடங்கள் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட காலியிடங்களும் அடங்கும். UPSC CSE 2024 இரண்டு […]

You May Like