மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க நாளை சேலத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
மின் இணைப்புடன் ஆதாரை கட்டாயம் அனைவரும் இனைக்க வேண்டும் என்கின்ற உத்தரவை தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டது. நுகர்வோர் தங்கள் மின் மானியத்தைப் பெற விரும்பினால், ஆதார் அட்டையுன் மின் எண்ணை இணைக்க வேண்டும். இதற்கான அரசாணையும் பிறப்பித்துள்ளது அரசு.
இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் கூடுதல் சிறப்பு முகாம் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. வேம்படிதாளம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட மின் இணைப்பு நுகா்வோா் மின் இணைப்புடன் ஆதாா் எண்ணை இணைக்க கூடுதல் சிறப்பு முகாம் திங்கள்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி அனைவரும் ஆதாா் எண்ணை இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நவம்பர் 24 முதல் நவம்பர் 30 வரை இணைப்பதற்கான முதல் அறிவிப்பை வெளியிட்டது பின்னர் மேலும் ஒரு மாத காலம் அவகாசம் வழங்கி அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டிருந்தார். வரும் 31-ம் தே கடைசி நாள் என்பதால் பொதுமக்கள் அனைவரும் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மின்வாரியம் https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற புதிய இணையதள முகவரியை பயன்படுத்தி இணைத்துக் கொள்ளலாம்.