fbpx

இன்று மதியம் 15 மணி வரை சென்னையில் மெட்ரோவில் இலவச பயணம்…! இவர்களுக்கு மட்டும் தான்…

சென்னையில் மாரத்தானில் பங்கேற்போர் வசதிக்காக இன்று அதிகாலை 3.40 முதல் சிறப்பு மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது.

கருணாநிதி நினைவு தினத்தை முன்னிட்டு 4-வது சா்வதேச மாரத்தான் போட்டி இன்று காலை 11 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டி 5 கி.மீ., 10 கி.மீ., 21.1 கி.மீ., 42.2 கி.மீ. ஆகிய 4 பிரிவுகளில் நடைபெறுகிறது. அனைத்துப் பிரிவுகளும் மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் தொடங்கி, தீவுத்திடல் மைதானத்தில் முடிவடைகிறது. 

இந்த நிலையில் சென்னையில் மாரத்தானில் பங்கேற்போர் வசதிக்காக இன்று அதிகாலை 3.40 முதல் சிறப்பு மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மாரத்தானில் பங்கேற்போர் இன்று அதிகாலை 3.40 மணி முதல் நண்பகல் 12 மணி வரை கட்டணம் இன்றி பயணிக்கலாம்.

Vignesh

Next Post

ஜெயிலர் படத்திற்காக விடுமுறை!இலவச டிக்கெட்!... ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தனியார் நிறுவனம்!

Sun Aug 6 , 2023
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள ஜெயிலர் படத்திற்காக ஆகஸ்ட் 10ம் தேதி விடுமுறை அறிவித்ததோடு, ஊழியர்களுக்கு பட டிக்கெட்டுகளையும் இலவசமாக வழங்கி தனியார் நிறுவனம் ஒன்று அசத்தியுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் ஆகஸ்ட் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்துக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், தமிழகம் மற்றும் பெங்களூருவில் 8 கிளைகளைக் கொண்ட தனியார் நிறுவனம் ஒன்று ‘ஜெயிலர்’ […]

You May Like