fbpx

வேகமாக வந்த கார் 3 கார்கள் மீது மோதி 5 பேர் பலி … அதிகாலையில் மும்பையில் பயங்கரம்..

அதிவேகத்தில் வந்த கார் அடுத்தடுத்த நின்றிருந்த 3 கார்கள் மீது மோதி ஆம்புலன்ஸ் மீது மோதி நின்றது இந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மும்பை அருகே பந்த்ராவொர்லி கடல் இணைப்புச் சாலையில் ஆம்புலன்ஸ் மற்றும் 3 கார்கள் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்தது. அப்போது அதிவேகத்தில் வந்த கார் ஒன்று வேகமாக நின்று கொண்டிருந்த வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில் 10 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிகக்ப்பட்டுள்ளனர்.

விபத்து நடந்த இடத்தில் இருந்த சி.சி.டி.வி. காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் , மூன்று கார் மற்றும் ஆம்புலன்ஸ் பாலத்தின் மீது நிற்கின்றன. அப்போது கார் அதிவேகத்தில் வருகின்றது. அடுத்தடுத்து மோதி நிலை தடுமாறி நிற்கின்றது.

இந்த விபத்து அதிகாலை 3 மணி அளவில் நடந்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பந்த்ரா வொர்லி கடல் இணைப்பு சாலையில் மும்பையில் நடந்த விபத்தில் 5 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது வருத்தமளிக்கின்றது. அவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல். படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் பூரண நலம் பெறவும் பிரார்த்திக்கின்றேன்.

Next Post

அடுத்த 3 மணி நேரத்திற்கு கன மழை .. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

Wed Oct 5 , 2022
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர் , விழுப்புரம் , கள்ளக்குறிச்சி , திருவண்ணாமலை , வேலூர் , திருப்பத்தூர் , ராணிப்பேட்டை , தஞ்சாவூர் , நாகப்பட்டினம் , மயிலாடுதுறை , அரியலூர் , பெரம்பலூர் , திருச்சிராப்பள்ளி , மற்றும் புதுக்கோட்டை ஆகிய 15 மாவட்டங்களில் […]
rain

You May Like