fbpx

புயலாவது..? மழையாவது..? சிறப்பாக செயல்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு ரூ.4,000 ஊக்கத்தொகை..!!

தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட சேதத்தால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்ட மக்கள் தற்போது வரை மீள முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 நிவாரணத் தொகை ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், புயலின்போது கடுமையாக உழைத்த தூய்மை பணியாளர்களுக்கு முதலமைச்சர் முக.ஸ்டாலின் ரூ.4,000 ஊக்கத்தொகை வழங்கினார். மிக்ஜாம் புயலால் சென்னை மாநகரமே வெள்ளத்தில் மூழ்கினாலும், தூய்மை பணியாளர்கள் 24 மணி நேரமும் கடுமையாக உழைத்தனர். இதையடுத்து, அவர்களை பாராட்டும் வகையில் பேரிடர் பணியில் சிறப்பாக செயல்பட்ட 3,429 பணியாளர்களுக்கு ரூ.4,000 ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

முன்னதாக சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த தூய்மை பணியாளர்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பிரியாணி விருந்து அளித்து கவுரவித்தார். சமூக வலைதளங்களிலும் தூய்மை பணியார்கள் பாரட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

பொங்கலுக்கு ரூ.2,000..? தமிழக மக்களுக்கு அடுத்தடுத்து அடிக்கப்போகும் ஜாக்பாட்..!!

Tue Dec 12 , 2023
தமிழ்நாட்டில் ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கம் வழங்கப்படுவது வழக்கம். அதேபோல் ஜனவரி மாதம் வர இருக்கிற பொங்கல் பண்டிகைக்கும் பொங்கல் பொருட்களுடன் ரூ.1,000 கிடைக்கும் என பொதுமக்கள் எதிர்பார்க்க தொடங்கிவிட்டனர். இதற்கான பணிகளை அரசு மேற்கொண்டிருந்த நிலையில், புயல் பாதிப்பு திடீர் முட்டுக்கட்டை போட்டது. இதனையடுத்து சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் […]

You May Like