fbpx

18 மணி நேரத்தில் உருவாகும் புயல்..!! 5 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..!! வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

18 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மத்திய மேற்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரமாக ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ளது. இது ஒடிசாவின் பரதீப்பில் இருந்து தெற்கில் சுமார் 430 கி.மீ. தொலைவிலும், (மேற்கு வங்கம்) திகாவில் இருந்து தெற்கு-தென்மேற்கில் 590 தொலைவிலும் மற்றும் (வங்காளதேசம்) கேபுபாராவில் இருந்து தென்-தென்மேற்கில் 740 கிமீ தொலைவிலும் மையம் கொண்டு உள்ளது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 18 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. பின்னர், சற்று வலு குறைந்து அக்டோபர் 25ஆம் தேதி மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வங்கதேசத்தின் கேபுபாரா மற்றும் சிட்டகாங் இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளது. புயலாக உருவாக்கும் பட்சத்தில் வட இந்திய பெருங்கடலில் புயலுக்கு பெயரிடும் முறைப்படி ஈரான் நாடு பரிந்துரைத்த Hamoon என பெயர் வைக்கப்பட இருக்கிறது.

இந்த புயல் காரணமாக தமிழ்நாட்டில் ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

பெரும் சோகம்..!! நாளொன்றுக்கு 120 குழந்தைகளை கொல்லும் இஸ்ரேல்..!! பாலஸ்தீனம் வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை..!!

Mon Oct 23 , 2023
கடந்த இரண்டு வாரங்களாக நீடித்து வரும் இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையிலான போர் காரணமாக தற்போது வரை 1,688 குழந்தைகள் காசாவில் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன அனைத்துலக குழந்தைகள் பாதுகாப்பு நிறுவனம், வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இஸ்ரேலின் தாக்குதலில் நாளொன்றுக்கு 120 பாலஸ்தீன குழந்தைகள் கொல்லப்படுவதாக பாலஸ்தீன வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அதே சமயத்தில், சுமார் 27 குழந்தைகள் மேற்கு கரையில் இஸ்ரேலிய படைகளால் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன் செய்தி நிறுவனம் செய்தி […]

You May Like