fbpx

16 வயது நர்சிங் கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய மாணவன்..!! பண்ருட்டியில் அதிர்ச்சி..!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த அன்னங்காரன் குப்பத்தை சேர்ந்தவர் வைத்தியநாதன். இவரது மகன் வாஞ்சிநாதன் (20). இவர் கல்லூரியில் பி.எஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர், பேர்பெரியான்குப்பம் ராஜன் நகரைச் சேர்ந்த 16 வயது நர்சிங் மாணவியை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அதன் விளைவாக இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர்.

அதன் விளைவாக மாணவி தற்போது கர்ப்பிணியாக இருப்பதை அறிந்து அவரது பெற்றோர் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். இது குறித்து பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வாஞ்சிநாதனை தேடி வருகின்றனர். சிறுமியை காதலித்து கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவன், தலைமறைவாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

ஒரு லிட்டர் ஆவின் பால் எவ்வளவு தெரியுமா..? சென்னை மக்கள் கடும் அவதி..!! அமைச்சர் எச்சரிக்கை..!!

Wed Dec 6 , 2023
மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வரலாறு காணாத கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகள் எங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் இன்று வரை தண்ணீர் வடியவில்லை. இதனால் மக்கள் அத்தியாவசிய பொருட்களுக்கே பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக பால் உள்ளிட்ட பொருட்களுக்கு சென்னையில் பல்வேறு பகுதிகளில் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனை காரணமாக வைத்து கடைக்காரர்கள் பலரும், ஆவின் பால் ஒரு […]

You May Like