கோவை மாவட்டம் துடியலூரை அடுத்த உருமாண்டம்பாளையத்தை சேர்ந்தவர் ஸ்ரீவர்சா (21). பெற்றோருடன் வசித்து வந்த இவர், தனியார் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார். இவர் வழக்கம் போல கல்லூரிக்கு சென்ற நிலையில், வகுப்பறையில் திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். இதனை பார்த்த சக மாணவிகள் பெரும் அதிர்ச்சி அடைந்து, கூச்சலிட்டதால் கல்லூரி நிர்வாகத்தினர் சென்று பார்த்தனர். பின்னர், மாணவியை மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மாணவி விஷம் குடித்துள்ளதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அவரது குடும்பத்தினர், சக மாணவிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது கறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர். அப்போது, மாணவி ஸ்ரீவர்சாவுக்கு பெற்றோர் திருமண ஏற்பாடு செய்து வந்ததாகவும், அதில் விருப்பம் இல்லாத நிலையில், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீசார் கூறியுள்ளனர். எனினும், இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.