fbpx

மாணவி உடலில் திடீர் மாற்றம்..!! மருத்துவ பரிசோதனையில் வெளிவந்த உண்மை..!! பள்ளி மாணவன் மீது போக்சோ வழக்கு..!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 15 வயது மாணவி, அதே பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், அதே பகுதி பள்ளியில் 17 வயதான மாணவர் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். உறவினர்களான இவர்கள் இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர். இந்த பழக்கம் நாளடைவில் மிக நெருக்கமாகியுள்ளது. இந்நிலையில், மாணவியின் உடலில் திடீரென பல்வேறு மாற்றங்கள் ஏற்படுவது பெற்றோருக்கு தெரியவந்தது. இதனால், சந்தேகம் அடைந்த பெற்றோர் மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர், 7 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். மகள் கர்ப்பமாக இருக்கும் செய்தியை கேட்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்த நிலையில், இதுகுறித்து மாணவியிடம் விசாரித்தனர்.

இதனையடுத்து, வந்தவாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். அதன் பேரில் மாணவியை கர்ப்பமாக்கிய 12ஆம் வகுப்பு மாணவன் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்து அந்த மாணவனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Chella

Next Post

நர்சிங் மாணவியை கதறவிட்ட 2 இளைஞர்கள்..!! வீட்டிற்கு வரவழைத்து மது ஊற்றி கொடுத்து பலாத்காரம்..!!

Tue Feb 21 , 2023
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நர்சிங் மாணவியை மது குடிக்க வைத்து, அவரது நண்பர்கள் இருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவி மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதைக் கவனித்த கல்லூரி நிர்வாகம், அவருக்கு கவுன்சிலிங் நடத்தியபோதுதான் இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. விசாரணையில், நர்சிங் மாணவியை, குற்றம் சாட்டப்பட்ட இருவரும் தங்கள் வாடகை வீட்டிற்கு அழைத்துள்ளனர். அப்போது, அங்கு சென்ற மாணவியை மது குடிக்க வற்புறுத்தி உள்ளனர். பின்னர், […]

You May Like