fbpx

தமிழக மக்களுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு…..! இனி இந்த கோவில் பிரசாதமும் உங்க வீடு தேடி வருமாம்…..!

தமிழ்நாட்டில் சில சமயங்களில் கோவில்களுக்கு நேரில் சென்று தரிசிக்க இயலாத பக்தர்கள் பலரும் தங்களுடைய வீட்டிலிருந்து கொண்டே கோவில் பிரசாதங்களை பெற்று வருகிறார்கள். அதன் அடிப்படையில், தற்போது வரையில் 49 பிரசித்தி பெற்ற கோவில்களின் பிரசாதத்தை பக்தர்களின் வீடுகளுக்கு தபால் மூலமாக இந்து சமய அறநிலையத்துறை அனுப்பி வைத்திருக்கிறது.

இந்த நிலையில் தான் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கின்ற ராமேஸ்வரத்தில் புகழ்பெற்ற ராமநாதசுவாமி கோவில் பிரசாதமும் பக்தர்களின் வீட்டிற்கு தபால் மூலமாக அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.

அதன் அடிப்படையில் கோவிலில் இருந்து தீர்த்தம், 50 கிராம் கற்கண்டு, ராமநாதசுவாமி மற்றும் பத்மதர்ஷினி அம்பாள் படம் விபூதி மற்றும் குங்குமம் போன்ற பிரசாதம் பக்தர்களின் வீட்டுக்கு தபால் மூலமாக அனுப்பி வைக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்திருக்கிறது. இதற்கு பக்தர்கள் இந்து சமய அறநிலையத்துறையின் www.hrce.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக முன்பதிவு செய்யலாம் என்றும் தபால் மூலமாக பிரசாதம் பெறுவதற்கு பக்தர்கள் 145 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Next Post

தொலைதூரக் கல்விக்கான தேர்வு அட்டவணை……! அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு……!

Fri Jun 30 , 2023
அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு தொலைதூரக் கல்வி வழங்கி வருகின்றது. தற்சமயம் அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அதாவது தொலைதூரக் கல்விக்கான தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டு இருக்கிறது. முதலாம் சமஸ்டர் முதல் 4ம் செமஸ்டர் வரையும் நடைபெறும் தேதி தொடர்பான முழுமையான விவரங்கள் இந்த அட்டவணையில் இடம் பெற்றிருக்கிறது. அதன் அடிப்படையில், எம்.பி.ஏ, எம்.சி.ஏ மற்றும் எம் எஸ் சி பாடப்பிரிவுகளுக்கான தேர்வு […]

You May Like