fbpx

பலருக்கும் தெரியாத சூப்பர் திட்டம்..!! ஏடிஎம் கார்டு வைத்திருந்தால் ரூ.5 லட்சம் வரை காப்பீடு..!! எப்படி தெரியுமா..?

இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளிலும் வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் சேவை வழங்கப்படுகிறது. ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணத்தை எடுக்க முடியும் என்பது மட்டும் தான் பல வாடிக்கையாளர்களுக்கு தெரியும். ஆனால், ஏடிஎம் கார்டு மூலம் காப்பீடு வசதியும் பெற்றுக் கொள்ளலாம் என்பது எத்தனை பேருக்கும் தெரியும்..? ஏடிஎம் கார்டு வழங்கப்பட்டவுடன் அந்த வாடிக்கையாளர்களுக்கு விபத்து காப்பீடும் கிடைக்க தொடங்கும். வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் ஏடிஎம் கார்டுகளின் வகைகளுக்கு ஏற்ப காப்பீடு தொகை வழங்கப்படுகிறது.

அதன்படி, சாதாரண மாஸ்டர் கார்டில் ரூ.50,000 காப்பீடும், கிளாசிக் ஏடிஎம் கார்டில் ரூ. 1,00,000 காப்பீடும், விசா கார்டில் ரூ.1,50,000 முதல் ரூ.2,00,000 வரையும், பிளாட்டினம் கார்டில் ரூ.5,00,000 லட்சம் வரையும் காப்பீடு வழங்கப்படுகிறது. மேலும், ஏடிஎம் கார்டு வைத்திருப்பவர்கள் விபத்தில் உயிரிழக்க நேரிட்டால் ரூ.1,00,000 முதல் ரூ.5,00,000 வரை காப்பீடு கிடைக்கும். ஒருவேளை விபத்தில் கை அல்லது கால்கள் போன்ற உடல் ஊனம் ஏற்பட்டால் ரூ.50,000 காப்பீடு கிடைக்கும்.

இந்த காப்பீடு தொகையை பெறுவதற்கு வங்கியில் முறையாக விண்ணப்பித்திருக்க வேண்டும். அட்டைதாரரின் நாமினி வங்கியில் விண்ணப்பத்தை கொடுக்க வேண்டும். மேலும், இதைத் தொடர்ந்து வங்கியில் இருந்து உரிய காப்பீடு தொகை கிடைக்கும்.

Chella

Next Post

”ஆதார் விவரங்களை இனி நம்மால் மாற்ற முடியாது”..!! UIDAI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

Wed Apr 19 , 2023
ஆதாரில் பெயர், பிறந்த தேதி, பாலினம் உள்ளிட்ட விவரங்களை தனிப்பட்ட முறையில் தானாக மாற்ற முடியுமா? என்ற சந்தேகம் பரவலாக உள்ள நிலையில், இதுகுறித்து இந்திய தனித்துவ ஆதார் அடையாள ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. ஆவணங்கள் என்றாலே அதை நாம் எந்நேரமும் பத்திரப்படுத்த வேண்டியதாயிருக்கிறது.. எங்கே செல்வதானாலும், அவைகளை பாதுகாப்புடன் கொண்டு சென்று, வீடு திரும்ப வேண்டுவது அவசியமாகிறது.. அடையாள அட்டைகளை கூட பாக்கெட்டில் எடுத்து செல்ல வேண்டியிருந்தது… ஆனால், […]

You May Like