பிரபல காமெடி நடிகர் யோகி பாபு மருதமலை திருக்கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.
தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. தற்போது, கோவையின் ஜி.டி. நாயுடு வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்து வருகின்றனர். இந்தப் படத்தில் நடிகர் மாதவன் கதாநாயகனாகவும், முக்கிய கதாபாத்திரத்தில் யோகி பாபுவும் நடிக்கின்றனர். இதற்கான படப்பிடிப்பு கோவையில் இரண்டு நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
இந்நிலையில் தான், படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக நடிகர் யோகி பாபு கோவை வந்தார். பின்னர், மருதமலை சுப்பிரமணியசாமி திருக்கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செதார். விசேஷ பூஜையான அர்த்தஜாம பூஜையில் கலந்து கொண்டு, தான் கொண்டு வந்து புதிய படப்பிடிப்பின் கதை கோப்புகளை சாமியின் பாதத்தில் வைத்து வணங்கி ஆசி பெற்றார். மேலும், அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் முருகன் படம் பரிசாக அளிக்கப்பட்டது.