fbpx

மார்ச் 28ல் வானில் நிகழவுள்ள ஆச்சரியம்!… பூமிக்கு அருகே 5 கோள்கள் ஒன்றாக தோன்றும் அரிய நிகழ்வு!…

வரும் 28ம் தேதி பூமிக்கு அருகில் 5 கோள்கள் ஒன்றாக தோன்றும் என்றும் இந்த அரிய நிகழ்வை சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு அனைவரும் பார்க்கலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மார்ச் 28ஆம் தேதி செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, யுரேனஸ் ஆகிய 5 கோள்கள் ஒன்றாக பூமிக்கு மிக அருகில் தோன்றும் அரிய வானியல் நிகழ்வு நடைபெற உள்ளது. அதாவது வரும் 28ம் தேதி செவ்வாய்க்கிழமையன்று சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு இந்த அரிய நிகழ்வானது அதற்கு முன்தினம் மற்றும் அடுத்த நாளும் வானத்தில் தெரியக்கூடும் என்று கூறப்படுகிறது. அப்போது, செவ்வாய், வியாழன், சனி, புதன்,நெப்டியூன் ஆகிய கிரகங்கள் வானத்தில் மிகவும் நெருக்கமாக தோன்றும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த கோல்கள் மார்ச் 28ஆம் தேதி சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு 50 டிகிரி பிரிவில் தோன்றும். இந்த நிகழ்வை conjunction என அழைக்கப்படுகிறது.

நாசாவின் கூற்றுப்படி, conjunction என்பது இரண்டு கிரகங்கள், ஒரு கிரகம் மற்றும் சந்திரன், அல்லது ஒரு கிரகம் மற்றும் நட்சத்திரம் பூமியின் வானில் நெருக்கமாகத் தோன்றும். இது அவ்வப்போது நிகழும். கிரகங்கள் சூரியனை சுற்றி வரும் பாதையில் நேர்கோட்டில் வரும்போது இந்த நிகழ்வு நடைபெறுகிறது. மேலும், ஒரே நேர்கோட்டில் தெரியும் இந்த 5 கோள்களும் பூமியில் இருந்து பார்த்தால் கிட்டதட்ட ஒரு வில் வடிவத்தில் தெரியும் என்றும் புதன் மற்றும் யுரேனஸ் ஆகிய கோள்களை மட்டும் தொலைநோக்கி கொண்டு பார்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஆண்டில் செவ்வாய், வியாழன், சனி, புதன்,நெப்டியூன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்தித்த அரிய நிகழ்வு நடந்தது. அதேபோல் வானத்தில் பிரகாசமான கிரகங்களான வெள்ளி மற்றும் வியாழன், கடந்த பிப்ரவரி மாதத்தில், ஒவ்வொரு நாளும் ஒன்றையொன்று நெருங்கி வந்தன. இதேபோல், கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு பிறகு முதல் முறையாக அந்த அரிய நிகழ்வு கடந்த ஆண்டு ஜூன் மாதம் தெரிந்தது. அப்போது, புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகியவை தெரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

WOW!... வந்துவிட்டது மேலும் ஒரு புதிய அப்டேட்!... கணினி, லேப்டாப்களிலும் வீடியோ கால் பேசலாம்!... வாட்ஸ் ஆப் நிறுவனம்!

Fri Mar 24 , 2023
கணினியில் வாட்ஸ் ஆப் வெப் மூலம் வீடியோ கால் பேசலாம் என்றும் மேலும் வாய்ஸ் காலில் 32 நபர்கள் வரை ஒரே நேரத்தில் அழைப்பில் இணைந்திருக்க முடியும் என்ற புதிய வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் அறிவித்துள்ளது. சமூக வலைதளங்களான ட்விட்டர், பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், டெலிகிராம், ஷேர்சாட் உள்ளிட்டவைகளின் பயன்பாடு அனைவரது மத்தியிலும் பெரும் மைல்கல்லாக உள்ளது. இதில் அதிகளவில் மக்கள் பயன்படுத்தும் சமூகவலைதளமாக வாட்ஸ் அப் […]

You May Like