கர்நாடகாவில் சீருடையில் மலம் கழித்த 8 வயது சிறுவன் மீது ஆசிரியர் ஒருவர் கொதிக்கும் நீரை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..
கர்நாடகா மாநிலம் ராய்ச்சுரு மாவட்டத்தில் உள்ள மஸ்கியில் உள்ள ஸ்ரீ கணமதேஸ்வரா தொடக்கப் பள்ளியில் 2-ம் வகுப்பு படிக்கும் சிறுவன், பள்ளி சீருடையில் மலம் கழித்துள்ளார். குழந்தையை தண்டிக்க ஆசிரியர் ஹுலிகெப்பா கொதிக்கும் நீரை ஊற்றியதாக கூறப்படுகிறது. இதனால் சிறுவன் 40% காயம் அடைந்து லிங்கசகுரு தாலுகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவத்தையடுத்து, ஆசிரியர் பள்ளிக்கு வரவில்லை என கூறப்படுகிறது. ஆனால், சிறுவனின் பெற்றோரை அதிகாரத்தில் உள்ள சிலர் வெளிப்படையாக மிரட்டியதாக தெரிகிறது.. ஆனால் அவர்கள் போலீசில் புகார் அளிக்கவில்லை.
குழந்தைகள் நலக் குழுவோ அல்லது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளோ பாதிக்கப்பட்ட சிறுவனை பார்க்கவே இல்லை என்று கூறப்படுகிறது.. சிறுவனின் அவல நிலையைப் பார்த்துக் கண்டுகொள்ளாமல் இருக்காமல் போலீஸார் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்..