fbpx

14 வயது பள்ளி மாணவனை பாலியல் உறவுக்கு அடிமையாக்கிய ஆசிரியை..!! அதிரவைத்த சம்பவம்..!!

அமெரிக்காவில் 14 வயது பள்ளி மாணவனை, கவுன்சிலிங் தருவதாக கூறி, பலமுறை உடலுறவு வைத்துக் கொண்டு, பள்ளி ஆசிரியையே மாணவனை பாலியல் இச்சைக்கு அடிமையாக்கி, மன உளைச்சலுக்குள்ளாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் பக்ஸ் கவுன்டி பகுதியில் உள்ள பென்ரிட்ஜ் சவுத் மிடில் பள்ளியில் கவுன்சிலிங் வழிகாட்டியாக கெல்லி ஆன் ஸ்கட் (35) என்ற ஆசிரியை பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கெல்லி அந்த பள்ளியில் உள்ள 14 வயது மாணவருடன் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் முதல் பல்வேறு தருணங்களில் பாலியல் உறவில் இருந்துள்ளார். இதுகுறித்து முதலில், கெல்லியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கவனித்துள்ளார். அவரும் பள்ளியில் வேலை செய்கிறார். கெல்லியின் வீட்டில், மாணவரும் கெல்லியும் முத்தம் கொடுத்துக் கொண்டிருந்துள்ளனர். இதனை கவனித்த கெல்லியின் உறவினர், உடனடியாக வீட்டுக்குள் சென்று அந்த மாணவனை வெளியே போகும்படி கூறியுள்ளார்.

இதனால், பயந்து போன அந்த மாணவன் வெளியே ஓடி சென்று, அவனுடைய பெற்றோரை தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு, தன்னை அழைத்து செல்லும்படி கூறியுள்ளான். பெற்றோரிடம் அந்த மாணவன், கெல்லியுடன் காதல் மற்றும் பாலியல் உறவில் இருந்த விவரங்களை கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த மாணவனின் தாயார் போலீசாரை தொடர்பு கொண்டிருக்கிறார்.

விசாரணையில், பள்ளி பேருந்தில் கெல்லி அருகே மாணவன் அமர்ந்தபோது இருவருக்கும் இடையே அறிமுகம் ஏற்பட்டது. பின்னர் கெல்லி, அவருடைய அலுவலகத்திற்கு அடிக்கடி வரும்படி மாணவனிடம் கூறியுள்ளார். அந்த ஆண்டு பள்ளி பருவம் முடிந்த பின், ஸ்நாப்சாட்டில் இருவரும் உரையாடி வந்துள்ளனர். பின்னர், உடல்சார்ந்த உறவை தொடங்கியுள்ளனர்.

கடந்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில், மாணவனுடன் கெல்லி பலமுறை பாலியல் உறவு வைத்திருக்கிறார். கெல்லியின் வீட்டில் வைத்தும், மாணவனின் பெற்றோர் மற்றும் சகோதரி வீட்டில் இல்லாதபோது, அவனுடைய படுக்கையறையிலும், மாணவனை கெல்லி பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். கெல்லியின் காரிலும் மாணவனுடன் அவர் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார்.

விசாரணை அதிகாரிகளிடம் மாணவன் இதனை கூறியபோது, கெல்லியின் காதணிகளை மாணவனின் வீட்டில் இருந்து அதிகாரிகள் கண்டெடுத்தனர். இருவரிடையேயான குறுஞ்செய்திகள், இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் கைப்பற்றப்பட்டன. கெல்லியிடம் நடந்த விசாரணையில் அவர் இதனை ஒப்பு கொண்டார்.

பின்னர், கெல்லி கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். எனினும், ரூ.20.80 லட்சம் தொகைக்கான ஜாமீனில் கெல்லி விடுவிக்கப்பட்டார். அந்த மாணவனுடன் மற்றும் மாணவனின் குடும்பத்தினருடன் எந்தவித தொடர்பும் வைத்து கொள்ளக் கூடாது என்ற நிபந்தனையுடன் கெல்லி விடுவிக்கப்பட்டார்.

Chella

Next Post

பெரும் சோகம்..!! இறப்பு சான்றிதழ் வாங்க சென்றவருக்கு இப்படி ஒரு நிலைமையா..? திருச்சியில் அதிர்ச்சி..!!

Fri Nov 17 , 2023
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பொய்யாமலை ரோடு, உதயம் தியேட்டர் அருகில் உள்ள ராமகிருஷ்ணன் என்பவரது மகன் மணவாளன் (வயது 60). இவரது தங்கை திருச்சி செந்தண்ணிர்புரம் பகுதியில் வசித்து வருகிறார். அவரது கணவர் இறப்பு சான்றிதழ் வாங்குவதற்காக மணப்பாறையில் இருந்து திருச்சிக்கு வந்துள்ளார். அப்போது அரியமங்கலம் பகுதியில் ரயில்நகர் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்த மணவாளன் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் […]

You May Like