fbpx

விவாகரத்தான பெண்ணை ஏமாற்றி ரூ.20 லட்சத்தை சுருட்டிய வாலிபர்..!! நடுரோட்டில் தவித்த பரிதாபம்..!!

கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த 30 வயதை தாண்டிய பெண் ஒருவர் ஏர்லைன் நிறுவனம் ஒன்றில் விமான உதவி பணியாளராக பணியாற்றி வருகிறார். திருமணமாகி விவகாரத்தான இந்த பெண், மறு திருமணம் செய்து கொள்வதற்காக மேட்ரிமோனி தளத்தில் பதிவு செய்துள்ளார். இவரிடம் கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி அன்ஷுல் ஜெயின் என்ற நபர் ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்டு தன்னை அறிமுகம் செய்துகொண்டார்.

பெண்ணின் ப்ரோபைல் பிடித்து போனதாகவும் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். தன்னை தொழிலதிபர் என்று அறிமுகம் செய்து கொண்ட அந்த நபர், டெல்லியை அடுத்து உள்ள குருகிராம் பகுதியில் வசிப்பதாக தெரிவித்துள்ளார். அவருடன் பெண் வாட்ஸ் அப் மூலம் பேசி பழகி பின்னர் திருமணத்திற்கும் சம்மதம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், மே 7ஆம் தேதி அன்று டெல்லியில் உறவினர் திருமணம் நடைபெறுவதாக கூறி பெண்ணையும் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அழைத்துள்ளார். தனது பெற்றோரை பார்க்க ஏற்பாடு செய்கிறேன். சிறப்பான உடைகள், நகைகள் ஆகியவற்றை எடுத்துவா என்று கூறியுள்ளார்.

அவரின் பேச்சை நம்பி இந்த பெண்ணும் டெல்லிக்கு விமானத்தில் சென்றுள்ளார். விமான நிலையம் வந்த பெண்ணை அன்ஷுல் காரில் வந்து பிக் செய்து கொண்டார். அந்த பெண் தனது பொருள்களை காரில் வைத்து புறப்பட்ட நிலையில், சிறிது துரம் சென்றவுடன் காரை நிறுத்தியுள்ளார். கார் டையர் பஞ்சர் ஆகியிருக்கிறது போல இறங்கி பார் என்று பெண்ணிடம் கூறியுள்ளார். பெண்ணும் அதை நம்பி காரை விட்டு இறங்கவே, சடாரென கதவை மூடி காரை வேகமாக ஓட்டி சென்றுள்ளார். நடு சாலையில் அதிர்ச்சியடைந்து நின்ற அந்த பெண், டெல்லி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். பெண்ணின் நகைகள் உள்ளிட்ட ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருளை அன்ஷுல் திருடி சென்றதாக கூறப்படுகிறது. ச்அதைத் தொடர்ந்து செல்போன் ஆதாரங்கள் ஆகியவற்றை திரட்டி மோசடி ஆசாமியின் இருப்பிடத்தை தேடும் பணியில் தீவிரமாக இறங்கியது.

அதன்படி, கோவாவில் மறைந்திருந்த அவரை காவல்துறை விரட்டி பிடித்து கைது செய்தது. அந்த பெண்ணிடம் இருந்து திருடப்பட்ட நகைகள் மீட்கப்பட்டன. விசாரணையில், கைது செய்யப்பட்ட அன்ஷுல் ஜெயின் பிரிட்டனில் எம்பிஏ பட்டம் பெற்றவர் என்றும், தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக வீட்டை விட்டு வெளியேறி இது போன்ற மோசடி கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

Chella

Next Post

வங்கிக் கணக்கில் டெபாசிட் ஆன ரூ.2 லட்சம்..!! செலவு செய்த வியாபாரி..!! பணத்தை திரும்பக் கேட்டதால் தற்கொலை..!!

Sun May 21 , 2023
வங்கிக் கணக்கில் தவறுதலாக வந்த ரூ.2 லட்சத்தை செலவு செய்து திருப்பிக் கொடுக்க முடியாமல் போன வியாபாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே காட்டு நெய்வேலி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (51). காய்கறி வியாபாரியான முருகேசனுக்கு, முசிறியில் உள்ள ஒரு வங்கியில் சேமிப்புக் கணக்கு உள்ளது. ஓராண்டுக்கு முன்பு அவரது கணக்கிற்கு, அதே வங்கி கிளையில் இருந்து, 2 லட்சம் […]

You May Like