fbpx

வீடு புகுந்து பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த வாலிபர்..!! பலமுறை மிரட்டி ஆசைக்கு அடிபணிய வைத்த கொடூரம்..!!

திருமணமான பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து இளைஞர் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் மோகன்கஞ்ச் கோட்வாலி பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் வேலை நிமித்தமாக வெளியூர் சென்றுவிட்டார். இதனை அறிந்த அந்த கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து பலாத்காரம் செய்து, அதை ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளார். திருமணமான பெண் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த இளைஞன் சாதி குறித்து திட்டி ஆபாச வீடியோவை வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார்.

இச்சம்பவம் ஜூன் மாதம் 2ஆம் தேதி நடைபெற்றதாக கூறப்படுகிறது. வீடியோவுக்கு பயந்து அந்த பெண் பிளாக்மெயிலுக்கு அடிபணிந்துள்ளார். அந்த வாலிபர் இதையே சாக்காக வைத்து அந்த பெண்ணை தனது காம இச்சைக்கு பலியாக்கியுள்ளார். பல நாள்கள் கடந்தும் அந்தரங்க புகைப்படம் மற்றும் வீடியோவை வாலிபர் டெலிட் செய்யாமல் மிரட்டிய நிலையில், பாதிக்கப்பட்ட பெண் ஒரு கட்டத்தில் தனது கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து குடும்பத்தாரின் துணையுடன் பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், காவல்துறை தரப்பு நடவடிக்கை எடுப்பதில் சுணக்கம் காட்டியதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, பாதிக்கப்பட்ட பெண்ணின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகத் தொடங்கியது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்காக இது இருந்தாலும், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதற்குப் பதிலாக காவல்துறை இந்த புகாரை ஒடுக்க முயல்கிறது என்று குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரி அஜய் குமார் சிங் கூறுகையில், ”சில நாட்களுக்கு முன்பு இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. சுமார் ஒரு மாதத்திற்கு பிறகு தான் இந்த விவகாரம் காவல்துறை கவனத்திற்கு வந்துள்ளது. உரிய விசாரணைக்குப் பிறகு, முழு விவகாரத்திலும் எஃப்ஐஆர் பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Chella

Next Post

’அவளைப் பற்றி என்கிட்ட கேட்காதீங்க’..!! த்ரிஷா பெயரை சொன்னாலே கோபமடையும் தந்தை..!! ஏன் தெரியுமா..?

Mon Jul 3 , 2023
அமீர் இயக்கிய மௌனம் பேசியதே படத்தில் தனது நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் தான் த்ரிஷா. பின்னர், விஜய், அஜித், சூர்யா என பலருடன் ஜோடி போட்டார். குறிப்பாக, 2004ஆம் ஆண்டு விஜய்யுடன் கில்லி படத்தில் தனலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அப்படத்திலிருந்து ரசிகர்களின் மனதை கவர்ந்த கனவுக்கன்னியாக மாறினார். விஜய்யும்-த்ரிஷாவும் ஏறத்தாழ 14 வருடங்களுக்கு பிறகு திரையில் மீண்டும் சேர்ந்து லியோ […]

You May Like