பீகார் மாநிலம் ககாரியா என்ற பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் நீரஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2009இல் ரூபி தேவி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில், இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளது. இந்நிலையில், ரூபி தேவிக்கு அப்பகுதியை சேர்ந்த முகேஷ் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த 2022ஆம் ஆண்டு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இதுகுறித்து நீரஜ் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் பிறகு கிராம பஞ்சாயத்தார் பலமுறை எச்சரித்தும் முகேஷ் ரூபி தேவியை விடுவதாக இல்லை.
இதற்கிடையே, ரூபி தேவியை திருமணம் செய்த முகேஷின் மனைவி பெயரும் ரூபி தான். முகேஷ் ரூபி தேவி திருமணம் செய்து கொண்டதால் அவருடைய மனைவி போலீசில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். இப்படிப்பட்ட சூழலில் திடீரென நீரஜுக்கும் மற்றும் முகேஷின் மனைவி ரூபிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாற கடந்த 18ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். மேலும், தன்னுடைய மனைவியை திருமணம் செய்த அதே நபரின் மனைவியை நீரஜ் திருமணம் செய்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.