fbpx

ரயிலில் கழிவறைக்கு போன கர்ப்பிணிக்கு காத்திருந்த பேராபத்து..!! வக்கிர புத்தியுடைய கயவர்கள் மீது கடுமையான நடவடிக்கை தேவை..!!

கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, அவரை ரயிலில் இருந்து தள்ளிவிட்ட வக்கிர புத்தி உள்ள கயவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் திருப்பூரில் பணியாற்றி வரும், தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக நேற்று கோவையில் இருந்து ஜோலார்பேட்டை வழியாக திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துள்ளார். அப்போது, கர்ப்பிணி இளம்பெண் கழிவறைக்கு சென்றிருக்கிறார். போதையில் அவரை பின் தொடர்ந்த சிலர், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

இதனால், அவர் கத்தி கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து, கர்ப்பிணி பெண்ணை ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளனர். பின்னர், அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கை, கால்களில் முறிவு ஏற்பட்ட கர்ப்பிணிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் பூஞ்சோலைக் கிராமத்தைச் சேர்ந்த ஹேமராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரயிலில் கர்ப்பிணி பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, அவரை ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக சாலையில் நடந்து செல்ல முடியவில்லை. தற்போது ரயிலில் கூட பயணிக்க முடியவில்லை என்ற நிலை வந்திருப்பது வெட்கக்கேட்டின் உச்சம்.

கர்ப்பிணி பெண் என்று கூட பாராமல் பாலியல் தொல்லை அளித்துள்ள, வக்கிர புத்தியுடைய கயவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என முதலமைச்சர் முக.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Read More : ”இனி Zomato கிடையாது”..!! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்..!! ஆனால் இன்னொரு சர்ப்ரைஸ் காத்திருக்கு..!!

English Summary

Opposition Leader Edappadi Palaniswami has urged strict action against the depraved thugs who sexually harassed a pregnant woman and pushed her off a train.

Chella

Next Post

புகை பிடிக்காதவர்களிடமும் அதிகரிக்கும் நுரையீரல் புற்றுநோய்.. இது தான் காரணம்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்..

Fri Feb 7 , 2025
A recent study published in The Lancet Respiratory Medicine journal has revealed that the incidence of lung cancer is increasing among non-smokers.

You May Like