இந்தியாவின் தேசிய விலங்கு புலி. பாந்தொரா டைக்ரிஸ் என்றழைக்கப்படும் புலிகள் பூனை இனத்தின் மிகப் பெரிய விலங்காகும். கார்னிவோரஸ் விலங்கான புலி, பெரும்பாலும், காட்டுப்பன்றி, மான் ஆகியவற்றை வேட்டையாடும். புலிகளுக்கு என்று எல்லைகள் உள்ளன. ஒரு புலியின் எல்லைக்குள் மற்றொரு புலி நுழையாது. புலிகள் தற்போது அழிவின் விளிம்பில் இருக்கின்றன. இந்தியாவில் அதிகபட்சமாக புலிகள் காணப்படுகின்றன. புலிகள் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை இங்கு பார்க்கலாம்.
புலிகளில் உமிழ்நீரில் ஆன்டிசெப்டிக் தன்மை அதிகம் இருக்கிறது. காயம் ஏற்பட்ட இடத்தில், உமிழ்நீர் பட்டால், ஏற்பட்டுள்ள காயம் இன்ஃபெக்ஷனாக மாறாமல் இருக்க அது உதவுகிறது. புலிகளுடன் மட்டுமல்லாமல், மற்ற பெரிய பூனைகளுடன் (அதாவது சிங்கம்) இனப்பெருக்கத்தில் ஈடுபடும். ஒரு ஆண் புலி பெண் சிங்கத்துடன் இனப்பெருக்கம் செய்யும் போது டைகான் இன பூனை உருவாகிறது. இவை லைகர் இனத்தை விட அளவில் பெரிய பூனைகள். லைகர் என்பது ஒரு பெண் புலி, ஆண் சிங்கத்துடன் சேரும்போது பிறக்கு கிராஸ் ப்ரீட் பூனையாகும். அமெரிக்கா, செக் ரிபப்ளிக், இந்தியா, அர்ஜென்டினா உள்ளிட்ட நாடுகளில் டைகான்களை காணலாம்.
மனிதனால் உருவாக்கப்பட்ட சூழலில், அல்லது இயற்கைக்கு மாறான சூழலில் வெவ்வேறு இடங்களில் இருக்கும் புலிகள் ஒன்றாக வாழும் சூழ்நிலை ஆம்புஷ் என்று அழைக்கப்படுகிறது. தாய் புலி, தனது குட்டிகளுடன் இருப்பதையும் ஆம்புஷ் என்று குறிப்பிடலாம். புலிகள் 20 முதல் 25 ஆண்டுகள் வரை உயிர்வாழும். ஆனால் பெரும்பாலும் 19 வயதை அடைந்தவுடனேயே புலிகள் இறந்துவிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புளோரிடாவின் தம்பாவில் உள்ள ஒரு மிருகக்காட்சிசாலையில் சர்க்கஸில் இருந்து மீட்கப்பட்ட ஃபிளாவெல் புலிதான் இதுவரை 25 வயது வரை உயிருடன் இருந்தது.
வீட்டில் வளர்க்கும் பூனைகள் போல் அல்லாமல், புலிகளுக்கு தண்ணீர் பிடிக்கும். மணிக்கணக்கில் தண்ணீரில் விளையாடும் புலிகள், சிறுவயது முதலே தண்ணீரில் வேட்டையாடவும் பழகிக்கொள்கின்றன. இதனால் இதன் இரை தண்ணீரில் இருந்தாலும் துரத்தி பிடித்து கொல்ல முடியும். புலிகளுக்கு பிறக்கும்போது கண்பார்வை இருக்காதாம். தாயின் வாசனையை வைத்து தான் இவை நடமாடுகின்றன. இதனாலேயே, பிறக்கும் குட்டிகள் பெரும்பாலும் பட்டினியால், அல்லது குளிரினால் இறக்கின்றன. சமயத்தில் தாய் புலியே தன் குட்டிகளை சாப்பிட்டுவிடுமாம்.