fbpx

Accident | பைக் மீது அதிவேகமாக மோதிய டிப்பர் லாரி..!! துடிதுடித்து பலியான தொழிற்சாலை ஊழியர்..!!

திருத்தணி அருகே இருசக்கர வாகனம் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் தொழிற்சாலை ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த குப்பம் கண்டிகை, பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தீபன்குமார் (31). இவர், திருவள்ளூர் – ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் போளிவாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் ஸ்டீல் தொழிற்சாலையில் வேலைபார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி கிருபா (29) என்ற மனைவியும், 10 மாதமே ஆன ஆண் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில், வழக்கம்போல் நேற்று (ஜனவரி 28) தீபன்குமார், தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து அதே பகுதியைச் சேர்ந்த அஜய்குமார், லட்சுமணன் ஆகியோருடன் திருவள்ளூர் நோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்போது, சத்திரம் பகுதியை கடந்து சென்றபோது, எதிரே அதிவேகமாக வந்த டிப்பர் லாரி ஒன்று, தீபனின் இருசக்கர வாகனம் மீது மோதியது.

இந்த விபத்தில் தீபன்குமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். மேலும், இருவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த தீபன்குமாரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More : ஷாம்பு முதல் சோப்பு வரை..!! மீண்டும் விலை உயருகிறது..!! என்ன காரணம் தெரியுமா..? அதிர்ச்சியில் பொதுமக்கள்..!!

English Summary

A factory employee tragically died in an accident where a tipper truck collided with a two-wheeler near Thirutani.

Chella

Next Post

”சார் என்னை விட்ருங்க”..!! பெண் ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த உடற்பயிற்சி ஆசிரியர்..!! தனி அறையில் வைத்து கொடூரம்..!!

Wed Jan 29 , 2025
Police have arrested a gym teacher in Chennai for sexually harassing a female teacher.

You May Like