fbpx

ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்கள் புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண்..‌.! அசத்தும் தமிழக அரசு…

தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களின் புகார்களை தெரிவிக்கும் மூலமாக ஊராட்சி மணி அழைப்பு மைய எண் வழங்கப்பட்டுள்ளது‌.

இது குறித்து ஊரக வளர்ச்சித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்; ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்தில் புகார் தீர்க்கும் பொருட்டு உதவி மையத்தினை அமைத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்தில் “ஊராட்சி மணி” அழைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வூராட்சி மணி அழைப்பு மையம் 26.9.2023 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறக்கப்படவுள்ளது.

இந்த “ஊராட்சி மணி” அழைப்பு மையத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளில் வசிக்கும் பொது மக்கள் தங்களின் புகார்களை தெரிவிக்கும் விதமாக மைய அழைப்பு எண் “155340” வழங்கப்பட்டுள்ளது. மாவட்டங்களில் “ஊராட்சி மணி” அழைப்பு மையத்தின் தொடர்பு அலுவலராக (Nodal Officer) மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரை நியமனம் செய்யப்பட்டுள்ளது.

ஊராட்சி மணி” அழைப்பு மையத்தின் செயல்பாடுகள் தொடர்பாக அடிப்படை விவரங்களை தெரிவித்திட ஆலோசனை கூட்டம் நடந்தது. மேற்படி காணெனி கூட்டத்தில் தொடர்பு அலுவலர் (Nodal Officer) ஆக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கலந்துகொண்டனர். இத்துடன் “ஊராட்சி மணி” தொடர்பான விவரங்கள் மற்றும் புகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அலுவலர்கள் நிலை விவரம் மற்றும் நடவடிக்கை எடுக்க வேண்டிய காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

”எடப்பாடி பழனிசாமி பல கொலைகள் செய்திருக்கிறார்”..!! ”அவரை விடாதீங்க”..!! கனகராஜின் சகோதரர் தனபால் பரபரப்பு பேட்டி..!!

Tue Sep 26 , 2023
கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்குத் தொடா்பான சிபிசிஐடி விசாரணைக்கு முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் காா் ஓட்டுநா் கனகராஜின் சகோதரா் தனபால் 2-வது முறையாக இன்று நேரில் ஆஜராகியுள்ளார். சிபிசிஐடி விசாரணைக்கு செல்லும் முன் செய்தியாளர்களை சந்தித்த அவர், “முதல் கட்ட விசாரணையில் 40-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன. இன்று மற்ற கேள்விகளை கேட்க இருக்கின்றனர். கனகராஜ் எடுத்து வந்த பைகள் யாரிடம் கொடுத்தார்கள் என்பது குறித்தும் தெரிவித்துள்ளேன். இதேபோல […]

You May Like