fbpx

குரங்கு அம்மை எதிரொலி… சென்னையில் மட்டும் 1,000 மருத்துவ பணியாளர்கள் 30 ஆம்புலன்ஸ் தயார்…! அமைச்சர் மா.சு தகவல்…!

உலகெங்கிலும் அதிகரித்து வரும் குரங்கு அம்மை காய்ச்சலுக்கு மத்தியில், உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் குரங்கு காய்ச்சலை உலகளாவிய சுகாதார அவசரநிலையாக அறிவித்தார். இதுவரை 75 நாடுகளைச் சேர்ந்த 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குரங்கு காய்ச்சல்  நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நோய்க்கு 5 பேர் வரை பலியாகி உள்ளனர். பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவி வருகிறது. நோயை சர்வதேச அவசர நிலையாக அறிவித்துள்ளது உலக சுகாதார அமைப்பு. மேலும் குரங்கு அம்மை நோயை கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உலக நாடுகளை வலியுறுத்தி வருகிறது.

இந்தியாவிலும் இந்த நோயானது பரவத் தொடங்கியுள்ளது. அனைத்து மாநிலங்களும் இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழக அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தீவிரப்படுத்தி வருகிறது. இது குரங்கு அம்மை குறித்து செய்தியாளர்களை சந்தித்த பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்; தமிழகத்தில் உள்ள 4 பன்னாட்டு விமான நிலையங்களிலும் வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய அவர்களில் இரண்டு சதவீதம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறோம் என்றும் இங்கே தற்போது வரையிலும் குரங்கம்மை பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் அங்கேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை அளிப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், 187 நாடுகளில் இருந்து வந்திருக்கக்கூடிய 3000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 2லட்சம் வரையிலும் காப்பீட்டு திட்டம் உள்ள 13 தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். செஸ் ஒலிம்பியாட் நடைபெறும் மகாபலிபுரத்தில் 1000 மருத்துவ பணியாளர்கள் 30 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் உள்ளன என்றார்.

Also Read: 3 ஆண்டுகளில் நடந்த ஒப்பந்த முறைகேடுகள்…! தமிழக அரசுக்கு அறப்போர் கொடுத்த புகார்…!

Vignesh

Next Post

மிக கவனம்.. தினமும் அதிகமாக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன...? அவசியம் எல்லாம் தெரிஞ்சுக்கோங்க...!

Fri Jul 29 , 2022
நீரிழப்பு பொதுவாக, அதிகப்படியான நீர்ச்சத்து ஆரோக்கியத்திற்கு எவ்வாறு அழிவை ஏற்படுத்தும் என்பதை மக்கள் அரிதாகவே புரிந்துகொள்கிறார்கள். எல்லாவற்றையும் அதிகமாகக் குடிப்பது ஆபத்து என்பது போல, நிறைய தண்ணீர் குடிப்பது போன்ற கருத்தும் தவறானவை. அதிகமாக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன…? அதிகப்படியான தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பக்கவிளைவுகள் சிறுநீரகங்களில் தொடங்கலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அதிகப்படியான நீரேற்றம் பீன் வடிவ உறுப்புகளுக்கு சவாலாக இருக்கலாம், ஏனெனில் அவை அதிகப்படியான […]
கொளுத்தும் கோடை வெயில்..! மது குடிப்பதை குறைத்துக் கொள்ளுங்கள்..! அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை..!

You May Like