பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு திமுகவிடம் இருந்து இதுவரை மொத்தமாக ரூ.1,250 கோடிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
திமுக ஆட்சி அமைந்த பிறகு பாஜக – திமுக இடையே கருத்தியல் ரீதியானம் அதுபோல் தமிழக மக்களின் நன்கு அறிந்ததே. அரசின் பல துறைகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை மாநில தலைவர் அண்ணாமலை முன்வைத்து வந்தார்.
அண்ணாமலைக்கு திமுக வழங்கிய நோட்டீஸ்:
பிஜிஆர் என்ற நிறுவனத்துக்கு மின்வாரியம் பல சலுகைகளை வழங்கி ஊழலுக்கு வழிவகுத்து உள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி என அண்ணாமலை குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதையடுத்து பிஜிஆர் நிறுவனம் அண்ணாமலையிடம் ரூ.500 கோடி நஷ்ட ஈடு கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
கடந்த ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாய் சென்றது குறித்து அவதூறாக பேசியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு ஆர்.எஸ்.பாரதி வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.
இந்த நிலையில் தான் ஏப்ரல் 14ஆம் தேதி திமுகவில் சொத்து பட்டியல்களை வெளியிடப் போவதாக அறிவித்தார். அறிவித்ததை போலவே சொத்து பட்டியல்லை வெளியிட்டதுடன், முதலமைச்சர் ஸ்டாலின் மீது 200 கோடி ரூபாயில் ஊழல் குற்றச்சாட்டை முன் வைத்தார்.
சொத்து பட்டியல்லை அம்பலப்படுத்திய பிறகு, ஆர்எஸ் பாரதி ரூ.500 கோடிக்கும், உதயநிதி ஸ்டாலின் ரூ.50 கோடிக்கும், டிஆர் பாலு ரூ.100 கோடிக்கும் அவதூறு நோட்டீஸ் அனுப்பினார்கள். இதன் மூலம் அண்ணாமலைக்கு இதுவரை திமுகவிடம் இருந்து ரூ.1,250 கோடிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.