fbpx

திடீரென பெண் பக்தர் மீது முறிந்து விழுந்த மரக்கிளை..!! திருப்பதி கோயிலில் பயங்கரம்..!! பதைபதைக்கும் வீடியோ..!!

சாமி தரிசனம் செய்த பின்னர் மலைப்பாதை வழியாக நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணின் தலை மீது மரக்கிளை முறிந்து விழும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். மலைப்பாதை வழியாக இவர்கள் கோயிலுக்கு நடந்து செல்வது வழக்கம். அந்த வகையில், திருமலையின் மீதுள்ள ஜப்பலி ஆஞ்சநேய சுவாமி கோயில் அருகே சில பக்தர்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பழமையான மரம் ஒன்றின் கிளை திடீரென முறிந்து விழுந்தது. அப்போது, கீழே நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணின் தலை மீது அந்த கிளை அதிவேகத்தில் விழுந்தது.

இதில், அந்த பெண் படுகாயமடைந்து அங்கேயே சுருண்டு விழுந்து மயங்கினார். இதையடுத்து, உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தேவஸ்தான கோயிலுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருப்பதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதற்கிடையே, இச்சம்பவத்தை பக்தர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து அதனை இணையத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Read More : மக்களே உஷார்..!! மின்சாரம் தாக்கி திடீரென பற்றி எரிந்த உடல்..!! பதைபதைக்கும் வீடியோ..!!

English Summary

A video footage of a tree branch falling on the head of a woman who was walking along a mountain path after having darshan of Sami has created a sensation.

Chella

Next Post

அதிமுகவில் மீண்டும் இணைகிறார்களா சசிகலா, ஓபிஎஸ், டிடிவி..? நிர்வாகிகளின் கோரிக்கைக்கு எடப்பாடி கொடுத்த பதில்..!!

Sat Jul 13 , 2024
He consulted with Tanjore district administrators. Some administrators have demanded that Sasikala can be included in the AIADMK. But it has been reported that Edappadi Palaniswami categorically denied it.

You May Like