மகப்பேறு விடுப்பில் இருந்தபோது கர்ப்பம் தரித்ததற்காக பணிநீக்கம் செய்யப்பட்ட இங்கிலாந்துப் பெண்ணிற்கு தற்போது நீதி கிடைத்துள்ளது. நிருவனம் சார்பில் ரூ. 31 லட்சம் இழப்பீடு வழங்க வேளை வாய்ப்பு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
Pontypridd இல் உள்ள முதல் தர திட்டங்களில் நிர்வாக உதவியாளராக பணிபுரிந்த பெண், பணிநீக்கத்திற்காக நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். அந்தப் பெண்ணின் பெயர் நிகிதா ட்விட்சன். 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மகப்பேறு விடுப்பில் இருந்து திரும்பிய சில நாட்களுக்கு பிறகு, தான் கர்ப்பமாக இருப்பதாக நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜெர்மி மோர்கனிடம் கூறினார். அதன் பிறகு அவரின் அனுகுமுறை மாறியதாக அந்த பெண் குற்றம் சாட்டினார்.
ஏப்ரல் 4ம் தேதி மகப்பேரு விடுப்பு குறித்து நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு மின்னஞ்சல் அனுப்பினார். ஆனால், அவருக்கு பதில் கிடைக்கவில்லை. பின்னர் ஏப்ரல் 11 மற்றும் 18 தேதிகளில் விடுப்பு விண்ணப்பம் தொடர்பாக மின்னஞ்சல் அனுப்பினார். பின்னர், நிறுவனத்தின் நிதி சிக்கல்கள் காரணமாக நிகிதா பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவருக்கு மெயில் வந்துள்ளது. அதனை கண்டு அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார்.
நியாயமற்ற பணி நீக்கம் காரணமாக அந்த பெண் வேளை வாய்ப்பு தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் நிகிதா ட்விச்சனுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. பிப்ரவரி 2022 இல் தனது நிறுவனம் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகவும் அதற்கு நிதிப் பிரச்சனைகள் எதுவும் இல்லை என்பதையும் நீதிமன்றம் கண்டறிந்தது. இந்த வழக்கில் நிதி சிக்கல்கள் அல்லது புதிய மென்பொருள் தொடர்பான ஆதாரங்களை முன்வைக்க முதல் தர நிறுவனம் தவறியதையும் நீதிபதி விமர்சித்தார்.
நிகிதாவை நீக்கியதற்கான காரணத்தை விளக்கும் எழுத்துப்பூர்வ ஆவணம் எதையும் நிறுவனம் வழங்கவில்லை. நிகிதா கர்ப்பமாக இருந்ததால் நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்டதாக தீர்ப்பாயம் கூறியது. மேலும், அவருக்கு 28,000 பவுண்டுகள் இழப்பீடு வழங்குமாறு நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Read more ; பெண்களே..!! உங்களுக்கு கல்யாணம் ஆகிருச்சா..? இந்த பிரச்சனை இருக்கா..? இதுக்கு தீர்வு தான் என்ன..?