fbpx

இளைஞரின் வயிற்றில் கர்ப்பப்பை..!! அதிரவைத்த அறுவை சிகிச்சை..!! ஷாக்கில் மருத்துவர்கள்..!!

இளைஞரின் வயிற்றில் கர்ப்பப்பை போன்ற பெண்களின் இனப்பெருக்க உறுப்புகள் இருந்ததால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஜார்கண்ட் மாநிலம் கோடா பகுதியில் 22 வயது இளைஞர் ஒருவர், கடும் வயிற்று வலி காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது, இளைஞருக்கு குடலிறக்கம் இருப்பது தெரியவந்தது. அந்த வாலிபருக்கு அல்ட்ரா சவுண்ட் பலமுறை செய்யப்பட்ட பிறகு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, மருத்துவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, இளைஞரின் வயிற்றில் கர்ப்பப்பை மற்றும் ஃபலோபியன் குழாய் போன்ற பெண்களின் இனப்பெருக்க உறுப்புகள் முழுமையாக வளர்ந்திருந்தது. இந்த உறுப்புகளை மருத்துவர்கள் ஆப்ரேஷன் மூலம் அகற்றினர்.

இளைஞரின் வயிற்றில் கர்ப்பப்பை..!! அதிரவைத்த அறுவை சிகிச்சை..!! ஷாக்கில் மருத்துவர்கள்..!!

அறுவை சிகிச்சைக்கு பிறகு வாலிபர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இது தொடர்பாக மருத்துவர் தாரா சங்கர் ஜா கூறுகையில், ”மில்லியன் கணக்கானவர்களில் ஒருவருக்கு தான் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படும். ஆண்களின் உடலில் பெண்களின் இனப்பெருக்க உறுப்புகள் வளர்வது ட்ரூ ஹெர்மாஃப்ரோட்டைட் என்று அழைக்கப்படுகிறது. மேலும், உயிரியல் ரீதியாக இது பெர்சிஸ்டண்ட் முல்லேரியன் டக்ட் சிண்ட்ரோம் என்று அழைக்கப்படுகிறது” என்று கூறியுள்ளார்.

Chella

Next Post

படுகொலை..!! 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு..!! காவல்துறையினர் குவிப்பு..!! பரபரப்பு

Sun Dec 25 , 2022
மங்களூருவில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூரு நகரில் சூரத்கல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தனது கடை முன் ஜலீல் என்பவர் நேற்றிரவு நின்று கொண்டிருந்துள்ளார். அவரை அடையாளம் தெரியாத இருவர், திடீரென தாக்கி, கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடினர். இந்த சம்பவத்தில் காயம் அடைந்த ஜலீல், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். […]
படுகொலை..!! 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு..!! காவல்துறையினர் குவிப்பு..!! பரபரப்பு

You May Like