நொய்டாவில் உள்ள ஹவுசிங் சொசைட்டியில் காதலியின் தலைமுடியை இழுத்து இளைஞன் பயங்கரமாக தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. குற்றம் சாட்டப்பட்ட நபரை போலீசார் கைது செய்தனர். பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க பல நாடுகளில் பல சட்டங்கள் இருந்தாலும், பொது இடங்களிலும் வீடுகளிலும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறையவில்லை. சமீபத்தில் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் இருந்து ஒரு இளைஞர் பொது மக்கள் முன்னிலையில் ஒரு இளம் பெண்ணை அடிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பலரும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வீடியோவில், இரவு நேரம் பொதுவெளியில் ஒரு இளைஞன் பெண்ணின் தலைமுடியைப் பிடித்து, மற்றொரு கையால் பெண்ணின் முகத்தில் பலமாக அறைகிறான். அந்த பெண் அழுது கொண்டிருக்கிறார். தொடர்ந்து அந்த நபர் பெண்ணை தாக்கும் போது அருகில் நின்றவர்கள் அந்த நபரை இழுத்து செல்லும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது.
இந்த வீடியோவை எட்டு லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இந்த காணொளிக்கு பலரும் கருத்து தெரிவித்து அந்த இளைஞரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட நபர் சூர்யா பதானா என்பதும் பாதிக்கப்பட்ட பெண் அவரின் காதலி என்பதும் தெரியவந்தது. அந்த இளைஞர் எதற்காக பெண்ணை தாக்கினார் என்பது தெரியவில்லை. நொய்டாவின் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ஹவுசிங் சொசைட்டிகளில் இருந்து இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
Read more ; காய்ச்சலால் உயிரிழந்த 7 வயது மகன்.. கடிதம் எழுதிவைத்து தம்பதி விபரீதம்..!! நெஞ்சை உலுக்கும் சோகம்..