fbpx

மலை உச்சியில் இருக்கும் கிராமம்!… ஆனால் மழையே பெய்யாத அவலம்!… காரணம் என்ன தெரியுமா?

நிலத்தில் இருந்து நீர் ஆவியாகி பூமியின் வளிமண்டலத்தில் குளிர்ந்து மேகங்களை உருவாக்குகிறது. இந்த மேகங்கள் போதுமான அளவு கனமாக இருக்கும்போது, ​​​​குளிர்காற்று படும்போது அவை மழை வடிவத்தில் பூமியில் விழுகின்றன. உலகின் அனைத்து பகுதிகளும் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ மழையைப் பெறுகின்றன. ஆனால் உலகில் மழையே பெய்யாத இடம் இருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா? அது எப்படி இருக்க முடியும். எல்லா இடங்களிலும் லேசான மழையாவது பொழியுமே என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால் உண்மைதான். உலகில் மழையே பெய்யாத ஒரு கிராமம் உள்ளது. பல ஆண்டுகளாக மழையின்றி அந்த கிராம மக்கள் தவித்து வருகின்றனர். அந்த கிராமத்தை பற்றி தான் இப்போது உங்களுக்கு சொல்ல இருக்கிறோம்.

ஏமன் நாட்டின் தலைநகர் சனாவில் தான் அல்-ஹுதீப் என்ற இந்த கிராமம் உள்ளது. இந்த கிராமம் தரை மட்டத்திலிருந்து சுமார் 3200 மீட்டர் உயரத்தில் ஒரு சிவப்பு மணற்கல் மலையின் உச்சியில் உள்ளது. மற்ற இடங்களை விட்டு உயரமாக இருந்தாலும் இந்த இடம் வறட்சியுடன் தான் காணப்படுகிறது. உலகம் முழுவதும் வருடத்தின் வெவ்வேறு நேரங்களில் மழை பெய்கிறது. ஆனால் அல் ஹுதைபே கிராமம் எப்போதும் வறண்டு கிடக்கிறது. இந்த கிராமத்தில் எப்போதும் மழை பெய்யாததால், வானிலை மிகவும் வறண்டு காணப்படும். பகலில் அதிகப்படியான வெப்பமும் இரவில், கிராமத்தில் உறைபனி குளிரும் இறங்குகிறது. மீண்டும் காலை சூரியன் உதிக்கும்போது வானிலை வெப்பமடைகிறது.

ஆனால் இந்த கிராமத்தில் ஏன் மழை பெய்வதில்லை என்ற கேள்வி எழும். அதற்கு காரணம், எமனின் இந்த பகுதியில் நீர் ஆதாரங்கள் போதுமானதாக இல்லாதது மற்றும் மேகங்கள் குவியாத உயரத்தில் கிராமம் அமைந்துள்ளது தான் காரணம். அதன் கீழ் அடுக்குகளில் மேகங்கள் குவிகின்றன. அல் ஹுதைப் கிராமத்தின் இடம் சமவெளியில் இருந்து சுமார் 3200 மீட்டர் உயரத்தில் உள்ளது. சாதாரண மழை மேகங்கள் சமவெளியில் இருந்து 2000 மீட்டருக்குள் குவியும். எனவே அல்-ஹுதைபின் மீது மேகங்கள் குவிவதில்லை. மேலும் மேகங்கள் இல்லாவிட்டால் மழை பெய்ய வாய்ப்பில்லை. அதனால் தான் இங்கு மழைக்கான பேச்சே இல்லை.

Kokila

Next Post

பயணம் செய்யும் போது வாந்தி வர இதான் காரணம்.. இதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

Tue Oct 24 , 2023
பொதுவாக பயணம் என்றால் பலருக்கு சந்தோஷத்தை கொடுக்கலாம். ஆனால் சிலருக்கு பயணம் என்றால் பெரிய தலை வலி. அதற்க்கு காரணம், பஸ், கார், ஆட்டோவில் சென்றால் வாந்தி, தலை சுற்றல் போன்ற அசெளகரியங்கள் ஏற்படும். இதனால் எப்போது போக வேண்டிய இடம் வந்து சேரும் என்று நினைத்துக்கொண்டு, பயணத்தை ரசிக்க முடியாமல் போய்விடும். நாம் சுற்றுலா போகும் போது, கண்டிப்பாக கையில் எலும்பிச்சை பலத்துடன், யாரிடமும் பேசாமல் வரும் நபர் […]

You May Like