fbpx

எப்போது வேண்டுமானாலும் எரிமலை வெடிக்கும்..!! 30 நிமிஷம் தான் டைம்..!! அரசு வெளியிட்ட எச்சரிக்கை..!!

ஐஸ்லாந்தின் ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் அமைந்துள்ள நகரம் கிரண்டாவிக். இங்கு 3 ஆயிரம் பேர் தான் வசிக்கின்றனர். இங்கு கடந்த வாரம் ஒரு மிகப்பெரிய பள்ளம் ஒன்று ஏற்பட்டது. பின்னர், தொடர்ச்சியாக மினி பூகம்பங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. இப்படி சுமார் 1000-க்கும் மேற்பட்ட பூகம்பங்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அங்கு நிலத்திற்கு அடியில் மாக்மா எனப்படும் நெருப்பு குழம்பு குவிந்து வருவதையும், பூமியின் மேற்பரப்பில் இருந்து ஒரு கிலோமீட்டருக்குள் இருப்பதையும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதனால் பாதுகாப்பு கருதி கிரண்டாவிக் வடக்கே 4 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஸ்வார்ட்செங்கி மின்நிலையத்தைச் சுற்றித் தற்காப்புச் சுவர்களைக் கட்டும் பணியை ஐஸ்லாந்து அரசு தொடங்கியுள்ளது.

மேலும், எப்போது வேண்டுமானாலும் எரிமலை வெடிப்பு ஏற்படும். நெருப்பு குழம்பு மிக அருகில் இருப்பதால், எரிமலை வெடிப்பு ஏற்படும் போது 30 நிமிடம் கூட இருக்காது என என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

தொடரும் கனமழை..!! உச்சத்திற்கு சென்ற காய்கறிகளின் விலை..!! அதிர்ச்சியில் பொதுமக்கள்..!!

Sat Dec 2 , 2023
தமிழ்நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் பருவமழை தீவிரமடைந்து கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், சந்தைக்கு காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில், டிசம்பர் 5ஆம் தேதி வரையிலும் மிக அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அடுத்தடுத்த நாட்களில் காய்கறிகளின் விலை இன்னும் உச்சத்திற்கு செல்ல வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் […]

You May Like