Russia – Ukraine War: ரஷ்யா-உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான போர் 1,000 நாட்களை எட்டியுள்ள நிலையில், ரஷ்யா மீது தாக்குதல் நடத்தினால், அணு ஆயுதங்களை பயன்படுத்த ஒப்புதல் அளித்து அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்.
உக்ரைன் மீது 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி ரஷ்யா தாக்குதலை தொடங்கியது. ரஷ்யா மீது உக்ரைனும் அவ்வப்போது டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் அணு ஆயுதம் இல்லாத ஒரு நாடு, அந்த பலம் பொருந்திய மற்றொரு நாட்டின் உதவியுடன் தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்று ரஷ்யா தனது கொள்கையில் மாற்றம் செய்துள்ளது.
ரஷ்யா-உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான போர் 1,000 நாட்களை எட்டியுள்ளது. இந்நிலையில், அணு ஆயுதக் கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. ரஷ்ய அதிபர் புடின் கையெழுத்திட்டுள்ள கொள்கையின்படி, டிரோன் தாக்குதல் நடத்தினால், ரஷ்யா பதிலுக்கு அணு ஆயுத தாக்குதல் நடத்தும் என்றும் கூறப்பட்டு உள்ளது. அமெரிக்க அளித்த சக்தி வாய்ந்த தொலைதூர ஏவுகணைகளை பயன்படுத்த அந்நாட்டு அதிபர் பைடன் உக்ரைனுக்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், ரஷ்யா பதிலுக்கு தனது அணு ஆயுத கொள்கையை மாற்றியுள்ளது.
Readmore: இன்று சர்வதேச குழந்தைகள் தினம்!. வித்தியாசமாக கொண்டாடும் நாடுகள்!