fbpx

எச்சரிக்கை விடுத்த அறிவிப்பு பலகை; இந்துக்கள் வாழும் பகுதி.. மத பிரச்சாரத்திற்கு அனுமதி இல்லை…

கோவை மாவட்டம் அன்னூர் அருகில் இந்துக்கள் வாழும் பகுதியில் மதப்பிரச்சாரம் மற்றும் மதக் கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை என்று பேனர் வைக்கப்பட்டுள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் இருந்து அன்னூர் செல்லும் சாலையில் காடுவெட்டி பாளையம் என்ற  கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தின் நுழைவுப் பகுதியில் இது இந்துக்கள் மட்டும் வாழும் பகுதி, இங்கு மதப் பிரச்சாரம் செய்யவும், மத கூட்டங்கள் நடத்தவும் அனுமதியில்லை, மீறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

சர்ச்சையை உண்டாக்கும் வகையில் வைக்கப் பட்டிருக்கும் இந்த அறிவிப்பு பலகை சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது. இந்த பேனரில் காவி மற்றும் மஞ்சள் நிறத்தில் எச்சரிக்கை என்ற பெரிய எழுத்துக்களுடன் ஆரம்பித்த வாசகங்கள், இப்படிக்கு காடுவெட்டி பாளையம் ஊர் பொதுமக்கள் என எழுதப்பட்டுள்ளது.

Baskar

Next Post

கும்பகோணம் அருகே மின்கம்பங்களுக்கு நடுவில் போடப்பட்ட சாலை.. சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது..!

Thu Aug 18 , 2022
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகில் மின் கம்பங்களை அகற்றாமல் சாலை விரிவாக்க பணிகளை மேற்கொண்டுள்ளனர். இதனால் விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது. கும்பகோணம் அருகே கொற்கை, பம்பைப்படையூர், தென்னூர், பட்டீஸ்வரம் சாலையை அகலப்படுத்தும் பணி நடந்தது. தென்னூரில் பழைய சாலையின் ஓரத்தில் எட்டு மின் கம்பங்கள் இருந்தன. அகற்றாமல் அப்படியே சாலை அமைக்கப்பட்டுள்ளது. கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைந்துள்ள இந்த சாலையில், தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று […]

You May Like