fbpx

200 மணி நேரம் தயாரிக்கப்பட்ட திருமண ஆடை!… கின்னஸ் சாதனை!… அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?

50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்வரோவ்ஸ்கி (Swarovski crystals) படிகங்களுடன் தைக்கப்பட்ட திருமண ஆடை ஒன்று கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

இன்றைய காலக்கட்டத்தில் அனைவரும் வியக்கும் வகையில்தான் ஆடம்பரமாய் சில திருமணங்கள் நடத்தப்படுகின்றன. அங்கெல்லாம் ஃபோட்டோஷூட், விருந்து உபசரிப்பு போன்றவை மட்டுமின்றி, மணப்பெண்ணுக்கான ஆடை மற்றும் நகை அலங்காரங்களும் கண்ணைக் கவர்வதாய் இருக்கின்றன. இந்த மணமகள் அணியும் ஆடைகள் இணையதளங்களில் வைரல் ஆகவேண்டும் என்ற நோக்கத்திலேயே அட்டகாசமாய் வடிவமைக்கப்படுகின்றன பெண்ணுக்கான ஆடைகள். அப்படியொரு ஆடைதான் தற்போது கின்னஸ் சாதனையில் இடம்பிடித்துள்ளது.

கடந்த மாதம் 14ஆம் தேதி அன்று மிலனில் நடைபெற்ற ஒரு ஃபேஷன் ஷோவில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்வரோவ்ஸ்கி (Swarovski crystals) படிகங்களுடன் தைக்கப்பட்ட ஒரு நேர்த்தியான திருமண ஆடை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஆடை இத்தாலியில் பிரபல திருமண ஆடை தயாரிக்கும் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன.குறிப்பாக, ஆடையின் கைப்பகுதிகளில் மட்டும் ஆயிரக்கணக்கான படிகங்கள் தைக்கப்பட்டுள்ளனவாம். இதை தயாரிக்க, 200 மணி நேரம் ஆனதாக அந்த ஆடை நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்பு இஸ்தான்புல்லில் 45 ஆயிரம் படிகங்களுடன் கூடிய ஓர் ஆடையை துருக்கியைச் சேர்ந்த நிறுவனம் அறிமுகப்படுத்தி கின்னஸ் சாதனை படைத்திருந்தது. தற்போது இந்த ஆடை, பழைய கின்னஸ் சாதனையை முறியடித்துள்ளது. தவிர, இந்த ஆடை சமூகவலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

Kokila

Next Post

அன்னக்கிளி மூலம் பறக்க ஆரம்பித்த இசைக்கிளியின் பயணங்கள்... "மேஸ்ட்ரோ" பிறந்த தினம் இன்று...

Fri Jun 2 , 2023
தமிழர்களின் நாடி, நரம்பு, மூச்சு, பேச்சு, இரத்தம் எல்லாவற்றிலும் இரண்டற கலந்தது இசை. அப்படிப்பட்ட ரசிகர்களின் இதயம்தோறும் நிறைந்துள்ள இளைய ராஜாவின் பிறந்தநாள் இன்று. ஃபேஸ்புக், யூடியுப், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் பெருங்கியுள்ள இந்த நவீன யுகத்தில், இளையராஜாவின் பாடல்கள் என்று தேடினால் பல லட்சம் பார்வைகளுடன் அந்த பாடல்கள் எண்ணிக்கையில் ஒரு சரித்திரத்தை படைத்து வருகிறது. பலர் இரவு நேரங்களில் தூங்குவதை விட்டுகூட இளையராஜாவின் பாடல்களை […]

You May Like