எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புதிய ஒப்பந்தத்தில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்கக் கோரி நாளை முதல் எல்.பி.ஜி. கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களில் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளதாக தென் மண்டல எல்.பி.ஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சுந்தரராஜன் நாமக்கல்லில் அறிவித்துள்ளார்.
இந்த வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக அன்றாடப் பயன்பாட்டில் மிக முக்கியமான கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்வதில் சிக்கல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் வீடுகள், ஹோட்டல் உள்ளிட்டவை கேஸ் கிடைக்காமல் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, முன்கூட்டியே கேஸ் சிலிண்டரை வாங்கி வைத்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.