fbpx

புறாக்களின் தொந்தரவால் கணவனை பிரிந்த மனைவி…..! வேலூர் அருகே சோகம்…..!

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்துள்ள பிராமனமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகளை உள்ளனர்.

இந்த நிலையில், சதீஷ்குமார் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை வழங்கினார். அந்த மனதில் அவர் தெரிவித்திருப்பதாவது,

என்னுடைய பக்கத்து வீட்டுக்காரர் தன்னுடைய வீட்டு மாடியில் கூண்டு அமைத்து 50க்கும் மேற்பட்ட புறாக்களை வளர்த்து வருகிறார். அந்த புறாக்கள் எங்களுடைய வீட்டருகே வந்து நாள்தோறும் எச்சம் செய்துவிட்டு சென்று விடுகிறது.

ஆகவே அன்பை வீட்டாரிடம் சென்று புறாக்களை மூடி வைக்குமாறு தெரிவித்தால் அவர் மிரட்டும் பாணியில் பேசுகிறார்.

புறாக்கள் எச்சம் கழிப்பதை சுத்தம் செய்யும்போது எனக்கும் என்னுடைய மனைவிக்கும் இடையே தகராறு ஏற்படுகிறது.. இதனால் நோய் தொற்று ஏற்படும் என்று பயந்து என்னுடைய மனைவி குழந்தைகளுடன் என்னை பிரிந்து அவருடைய தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிகொண்டா காதலத்திற்கு புகார் வருகிறேன் ஆனால் அவர்கள் எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இது குறித்து நடவடிக்கை மேற்கொண்டு என்னுடைய மனைவியை என்னுடன் சேர்த்து வைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Next Post

திருமணமான ஒரே மாதத்தில் காதல் மனைவியின் கழுத்தை நெறித்து கொலை செய்த கணவன்…….! கதறும் பெண் வீட்டார்…..!

Thu Jun 1 , 2023
கோவை சிறுவாணி சாலையில் உள்ள மத்தவராயபுரம் குறிஞ்சிநகரை சேர்ந்தவர் சஞ்சய் இவர் தனுடன் கல்லூரியில் படித்து வந்த செல்வபுரத்தை சேர்ந்த ரமணி என்ற இளம் பெண்ணை கடந்த மாதம் 8ம் தேதி காதல் திருமணம் செய்தார். இவர்களின் திருமணத்தை ரமணியின் பெற்றோர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆகவே சஞ்சயின் பெற்றோர் இந்த திருமணத்தை ஏற்றுக் கொண்டதால் திருமண தம்பதிகள் சஞ்சயின் பெற்றோருடன் சஞ்சயின் வீட்டில் வசித்து வந்தன. இந்த நிலையில் தான் […]

You May Like