உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றான விக்டோரியா நீர்வீழ்ச்சி முனையில் சுற்றுலாப் பயணி ஒருவர் படுத்து கொண்டிருப்பது போல் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பிரிட்டனின் ராணி விக்டோரியாவின் நினைவாக, டேவிட் லிவிங்ஸ்டோன் இந்த நீர் வீழ்ச்சிக்கு விக்டோரியா நீர்வீழ்ச்சி என்று பெயரிட்டார். இந்த விக்டோரியா நீர்வீழ்ச்சி DEVILS POOL என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த நிலையில் டிவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், 380 அடி உயரமுள்ள நீர்வீழ்ச்சியில் பெண் ஒருவர் படுத்திருப்பது போல எடுக்கப்பட்டிருக்கும் வீடியோ பகிரப்பட்டு மிக வேகமாக வைரலாகி வருகிறது. டிசம்பர் 30ஆம் தேதி பகிரப்பட்ட இந்த வீடியோவை 2 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் வீடியோவை லைக் செய்துள்ளனர்.