fbpx

இன்ஸ்டாவில் வேலைக்கு விண்ணப்பித்த பெண்!… ரூ.8.6 லட்சம் பணத்தை இழந்த சோகம்!… எப்படி பாதுகாப்பாக இருப்பது?

இன்ஸ்டாகிராமில் வேலைக்கு விண்ணப்பித்த பெண்ணிடம் ரூ.8.6 லட்சத்திற்கும் அதிகமான பணம் மோசடி செய்த சம்பவம் டெல்லியில் நிகழ்ந்துள்ளது.

டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர், வேலை தேடிக்கொண்டிருந்தார். அப்போது, சமூக வலைதளமான இன்ஸ்டாவில் ஒரு வேலைக்கான விளம்பரத்தை பார்த்துள்ளார். பின்பு அந்த வேலைக்கான லிங்க்-ஐ கிளிக் செய்தபோது தேவையான விவரங்களை உள்ளிடுமாறு கேட்கப்பட்டுள்ளது. அவரும் விவரங்களை கொடுத்துவிட்டு, ரூ.750 ஐ பதிவுக் கட்டணமாக டெபாசிட் செய்துள்ளார். அதன்பிறகு, கேட் பாஸ் கட்டணம், இன்சூரன்ஸ், செக்யூரிட்டி பணம்’ என, 8.6 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை, ராகுல் என்ற மோசடி நபரின் கணக்கிற்கு அந்த பெண் அனுப்பியுள்ளார்.

ராகுல் தொடர்ந்து அதிக பணம் கேட்டதை அடுத்து, சந்தேகமடைந்த அந்த பெண் மற்றும் அவரின் கணவர் போலீசில் புகார் அளித்தனர். தற்போது குற்றவாளியை டெல்லி போலீசார் கைது செய்து விசாரித்ததில், கோவிட் -19 தொற்று காலங்களின் போது வேலை இழந்த பின்னர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இது போன்று மக்களை ஏமாற்றத் தொடங்கியதாக குற்றம் சாட்டப்பட்டவர் காவல்துறையில் ஒப்புக்கொண்டார்.

இதுபோன்ற மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க பயனர்கள், LinkedIn, Naukri.com, Indeed போன்ற உண்மையான போர்ட்டல்களில் இருந்து வேலைகளுக்கு விண்ணப்பிப்பது சிறந்தது.ஒருவேளை நீங்கள் சமூக ஊடகங்கள் வழியாக வேலைகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால், கணக்கை முழுமையாகச் சரிபார்த்துவிட்டு, இது எவ்வளவு முறையானது என்பதை பொறுத்து விண்ணப்பிக்கலாம். மேலும் புகழ்பெற்ற நிறுவனங்கள் வேலையில் சேருவதற்கு எந்தவித கட்டணமும் கேட்பதில்லை. பெயர், ஃபோன் எண் போன்ற உங்களின் தனிப்பட்ட தகவல்களை நிரப்புவதற்கு முன் மிகவும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து, நம்பகமான இணையதளமா என்பதாகி உறுதி செய்துவிட்டு உள்ளிடவும்.

Kokila

Next Post

மகளிர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றார் தமிழக வீராங்கனை சவிதாஶ்ரீ!

Mon Apr 10 , 2023
தமிழகத்தை சேர்ந்த செஸ் வீராங்கனை சவிதா ஸ்ரீ, இந்தியாவின் 25 வது கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றுள்ளார். இந்தியாவில் நடந்த அகில இந்திய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த எரிக் ஹெட்மன்-ஐ வீழ்த்தி இந்தியாவின் 25வது மகளிர் கிராண்ட்மாஸ்டர் என்ற பட்டத்தை பெற்றார்.இதன் மூலமாக இந்தியாவின் மிக குறைந்த வயதை கொண்ட கிராண்ட்மாஸ்டர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். அவரின் தற்போதய வயது 15 என்பது குறிப்பிடத்தக்கது. […]

You May Like