ஒரு தீவிர கால்பந்து ரசிகர் தனது குழந்தைக்கு ஒரு பந்து மற்றும் ஒரு கோல்கம்பத்தை வாங்கி விளையாட கொடுத்துள்ளார். அவருடைய குழந்தை பிறந்ததிலிருந்து அந்த குழந்தைக்கு, கால்பந்து பயிற்சி அளித்து வந்துள்ளார்.
இதனால் குழந்தை தவழ ஆரம்பிப்பதற்கு முன்பே தரையில் படுத்துக்கொண்டே கோல் கம்பத்தில் சரியாக பந்தை உதைக்கும் வீடியோ வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த குழந்தையின் தந்தை, “மான்செஸ்டர் யுனைடெட்” ஃபுட்பால் கிளப் அணியின் தீவிர கால்பந்து ரசிகர் என்று தெரிவித்து உள்ளார்.
அதன்பிறகு குழந்தை வளர வளர ஒவ்வொரு பருவத்திலும் அந்த குழந்தை கால்பந்தை மிகச்சரியாக உதைத்து கோல் போஸ்டில் பந்தை அடித்துள்ளது. குழந்தையின் இந்த செயல் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது. அந்த குழந்தை எதிர் காலத்தில் மிகப்பெரிய திறமையான ஒரு கால்பந்து வீரராக வருவான் என வீடியோவை பார்க்கும் பலரும் கூறி வருகின்றனர்.